டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி!

2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: 2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் இந்திய வருகை தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பெஸோஸ். ஆனால் இந்தியா வந்த இவரை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் மோடிக்கு எதிராக கட்டுரை வெளியிடுவதுதான் இதற்கு காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதேபோல் வாஷிங்க்டன் போஸ்ட் மீது கோபத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியால் கொல்லப்பட்ட ஜமால் காசாக்கி வாஷிங்க்டன் போஸ்டில்தான் பணியாற்றி வந்தார்.

சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை!சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை!

இந்தியா வருகை

இந்தியா வருகை

இந்த நிலையில் இந்தியா வந்த ஜெஃப் பெஸோஸ், கடந்த புதன் கிழமை இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். 10 மில்லியன் பேர் இதனால் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் இதனால் வளரும். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இதனால் புதிய உயரம் தொடும் என்று ஜெஃப் பெஸோஸ் குறிப்பிட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஜெஃப் பெஸோஸின் இந்த அறிவிப்பை மத்திய அரசு சந்தோசமாக ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த முதலீடு காரணமாக இந்தியாவிற்கு பெரிய பலன் கிடையாது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஜெஃப் பெஸோஸ் சேவை எதையும் செய்யவில்லை. இதனால் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மிக மோசம்

மிக மோசம்

இவரின் இந்த பேச்சு கார்ப்ரேட் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வளவு பெரிய முதலீட்டை ஈகோ காரணமாக இந்தியா இப்படி நடத்த கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமேசான் முதலீடு காரணமாக இந்தியாவில் 2025க்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே அமேசான் மூலம் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2013ல் இருந்து அமேசான் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2025ல் நாங்கள் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்போம், என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Amazon will create 1 million jobs in India by 2025 says its founder Jeff Bezos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X