டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. இந்திய குடியரசு தினத்துக்கு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.. சிறப்பே இதுதான்! கவனிச்சீங்களா!

இந்தியா இன்று 74வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் இன்று கோலாகலமாக 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் உள்ள இந்த சிறப்பு டூடுல் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொ

இந்தியாவில் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்..ஓபிஎஸ் சொன்ன குடியரசு தின மெசேஜ் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என உறுதியேற்போம்..ஓபிஎஸ் சொன்ன குடியரசு தின மெசேஜ்

தேசியக்கொடி ஏற்றிய ஜனாதிபதி

தேசியக்கொடி ஏற்றிய ஜனாதிபதி

டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசு தினவிழாவில் கொடியேற்றினார். இந்த விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் அதிகாரிகள், என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மேலும் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

அணிவகுப்பு மரியாதை

அணிவகுப்பு மரியாதை

முப்படைகளிளின் அணிவகுப்பு மரியாதையோடு, எகிப்து நாட்டு வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுகொண்டார். மேலும் மாநிலங்கள் வாரியாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகள் நடந்தன. வீரர்கள் மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதை என்பது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குடியரசு தின அணிவகுப்பை ரசித்தனர்.

கூகுள் சிறப்பு டூடுல்

கூகுள் சிறப்பு டூடுல்

இந்நிலையில் தான் இந்தியாவின் குடியரசு தினத்துக்கு வித்தியாசமான முறையில் கூகுள் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதற்காக கூகுள் சிறப்பு டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. நீல நிற வானத்தின் பின்னணியில் இந்த சிறப்பு டூடூல் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டூடூலில் ஜனாதிபதிபதியின் ராஷ்ட்ரபதி பவன், டெல்லி கேட் போன்ற அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் குதிரை படை அணிவகுப்பு, ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் போன்ற வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனை பலரும் தற்போது இணையதங்களில் பகிர்ந்து வருகின்றன.

கூகுள் கூறியது என்ன?

கூகுள் கூறியது என்ன?

இதுபற்றி கூகுள் டூடுல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‛‛இன்றைய டூடுல் கலைப்படைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. காகிதத்தை கைகளால் வெட்டி இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின அணிவகுப்பின் பல கூறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. ராஷ்ட்ரபதி பவன் (ஜனாதிபதி வாழ்விடம்), இந்தியா கேட், சிஆர்பிஎப் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் சாகம் உள்ளிட்டவை டூடுலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கி யார்?

உருவாக்கி யார்?

இந்த சிறப்பு டூடுலை குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பார்த் கோதேகர் என்பவர் உருவாக்கி உள்ளார். இவர் காகிதத்தில் கலைநயம் மிக்க வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். இவர் இந்தியாவில் புகழ்பெற்ற கலைஞராகவும் உள்ளார். இவர் தனது கலைப்படைப்புகளை வைத்து ஏராளமான கண்காட்சிகளை நடத்தி உள்ளார். 2016ல் நியூசிலாந்து அரசு அவரது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த அழைக்கப்பட்டார்.

சிறப்பு டூடுல் ஏன்?

சிறப்பு டூடுல் ஏன்?

கூகுளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை போற்றும் வகையில் சிறப்பு டூடூலை இடம்பெற செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் இன்று இந்தியாவின் குடியரசு தினவிழாவுக்கான சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதுபோல் இந்தியாவின் பல முக்கிய நாட்களுக்கு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 74th Republic Day is being celebrated in a grand manner across the country today. In Delhi, President Droupadi Murmu hoisted the national flag and accepted the parade. In this case, Google has released a special doodle on the occasion of the Republic Day of India, the world's largest democracy. Interesting information behind this eye-catching special doodle has been revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X