ஆபாச வீடியோ: டாமன் டையூ பாஜக தலைவர் கோபால் டாண்டேலின் ராஜினாமாவை ஏற்றார் அமித்ஷா
டெல்லி: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய டாமன் டையூ பாஜகவின் தலைவர் கோபால் டாண்டேலின் ராஜினாமாவை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஏற்றுக் கொண்டார்.
டாமன் டையூவின் பாஜக தலைவரான இருந்த கோபால் டாண்டேலின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இதை கோபால் டாண்டேல் மறுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் கட்சியின் மாநில தலைவராக மீண்டும் வந்துவிடக் கூடாடு என நினைக்கிற சக்திகள்தான் இது போன்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டது.
எனக்கு எதிரான இந்த அரசியல் சதியால் மனம் நொந்து போய் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!