டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிரையும் கொடுப்போம்.. அமித்ஷா- ரஞ்சன் சவுத்ரி கடும் வாக்குவாதம்.. அனல் பறந்த லோக்சபா

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit shah : அமித்ஷா- ரஞ்சன் சவுத்ரி கடும் வாக்குவாதம்.. அனல் பறந்த லோக்சபா- வீடியோ

    டெல்லி: ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், லோக்சபாவில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்யும் ஜனாதிபதி உத்தரவின் அடிப்படையில், நேற்று ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத் திருத்தமும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

    Amit Shah and Ranjan Chowdhury engage in a heated debate over Jammu Kashmir

    இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று, லோக்சபாவில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் குழு தலைவரான ரஞ்சன் சவுத்ரி மற்றும் அமித் ஷா ஆகியோர் நடுவே ஆவேசமான விவாதம் எழுந்தது.

    தெருவில் இறங்கி ஆட்டம் போடும் மக்கள்.. லடாக்கில் உற்சாகம் தெருவில் இறங்கி ஆட்டம் போடும் மக்கள்.. லடாக்கில் உற்சாகம்

    ரஞ்சன் சவுத்ரி: இந்த விவகாரம் ஏன் ஒரு உள்நாட்டு விஷயமாக மட்டுமே கருதப்படுகிறது. இருதரப்பு பிரச்சினையாக (இந்தியா-பாகிஸ்தான்) ஏன் நீங்க பார்க்கவில்லை? நீங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி யோசிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் எல்லா சட்டங்களையும் மீறி, ஒரே நாள் இரவில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளீர்கள்.

    அமித் ஷா: ஜம்மு-காஷ்மீர் நாட்டின் ஒருமித்த பகுதி என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது இந்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே, இந்த நடவடிக்கையை யாரும் தடுக்க முடியாது.

    நீங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, இந்தியாவின் ஒரு பகுதியாகக் கருதவில்லையா? இந்த பிராந்தியத்திற்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுப்போம். நான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்லும்போது அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும். எங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காஷ்மீர் எல்லைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதுதான்.

    இவ்வாறு இரு தரப்பும் வாதத்தில் ஈடுபட்டனர்.

    அமித்ஷா மேலும் கூறுகையில், நேற்று முதல் ஜனாதிபதி உத்தரவின்படி, 370 (1 டி) பிரிவின்படி, மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தும். அதன்படி சட்டப்பிரிவு 370 (3) ஐப் பயன்படுத்தி, சட்டப்பிரிவு 370 ஐ அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

    English summary
    Amit Shah and Leader of the Congress party in the Lok Sabha Ranjan Chowdhury engage in a heated debate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X