டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்ஸிட் போல் பார்த்தே பயமா? இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் 6 முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் 6 முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுக்காக எல்லோரும் காத்து இருக்கிறார்கள். நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக புகார் வைத்து வருகிறது.

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம்

அமித் ஷா

அமித் ஷா

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் 6 முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதில், அரவிந்த் கெஜ்ரிவால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம்தான் டெல்லி முதல்வரானார். அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அவருக்கு அந்த தைரியம் இருக்கிறதா?

அமித் ஷா கேள்வி

அமித் ஷா கேள்வி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனை செய்யத்தான் விவிபாட் எந்திரங்கள் உள்ளது. அது வந்த பின்பும் கூட, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகப்படுவது எப்படி சரியாக இருக்கும்? வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன் வாக்கு எண்ணும் முறையை மாற்ற சொல்வது எப்படி சரியாக இருக்கும் சொல்லுங்கள்?

எக்சிட் போல்கள் பீதி

எக்சிட் போல்கள் பீதி

எக்சிட் போல்கள் எதுவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வரவில்லை. இதை பார்த்ததும் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதற்கே பயந்தால் எப்படி.. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது புகார்களை வைத்து எப்படியாவது எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

விவிபாட் மோசம்

விவிபாட் மோசம்

5 விவிபாட் எந்திரங்களை எண்ணலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆனாலும் நீதிமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிக்கிறது. இது சரியா? இதெல்லாம் நடக்கவில்லை என்றால் நீங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடலாம் என்று நினைக்கிறீர்கள், இது நியாயம் ஆகுமா, சொல்லுங்கள்? என்று அமித் ஷா ஆறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

English summary
BJP chief Amit Shah asks 6 questions to opponents on EVM issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X