டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம் லீக்.. சிவசேனாவின் பங்காளியான நீங்க மதசார்பற்ற கட்சியா.. காங்..மீது அமித்ஷா தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது?

    டெல்லி: முஸ்லீம் லீக்குடனும், சிவசேனா உடனும் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சியா என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 311 வாக்குகளும் அதற்கு எதிராக 80 வாக்குகளும் விழுந்தது.

    முன்னதாக குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதம் கிட்டத்தட்ட 8 மணி நேரம் வரை நீடித்தது. குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாத்தின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டை கூறின. அவர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார் அமித்ஷா. இதனால் தான் நேற்று விவாதம் அனல் பறந்தது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா... அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது: சட்ட வல்லுநர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா... அரசியல் சாசனத்தை சீர்குலைக்கிறது: சட்ட வல்லுநர்கள்

    மதசார்பற்ற கட்சியா

    மதசார்பற்ற கட்சியா

    குடியுரிமை திருத்த மசோதா இயற்கையாகவே இனவாதத்துடன் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியதற்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மதசார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் முஸ்லீம் லீக் உடன் கூட்டணி வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் கூட்டணி வைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் மதசார்பின்மையா என்றார்.

    நன்றி சொன்னார்

    நன்றி சொன்னார்

    இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு ட்வீட்டில், "மக்களவை குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 ஐ நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. மசோதாவை ஆதரித்த பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மசோதா இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது மற்றும் மனிதாபிமான விழுமியங்களை நம்புகிறது. " என்று கூறியுள்ளார்.

    பொறுமையாக விளக்கினார்

    பொறுமையாக விளக்கினார்

    குடியுரிமை திருத்த மசோதாவின் பல்வேறு அம்சங்களை பொறுமையாக விளக்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

    இனி இந்தியர்கள்

    இனி இந்தியர்கள்

    குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 ன் படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மததுன்புறுத்தலை எதிர்க்கொண்டதால் இந்தியா வந்துள்ள இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பபடும். அதாவது அவர்கள் டிசம்பர் 31, 2014 முன்பு இந்தியா வந்திருந்தால் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்திய குடிமக்களாக மாற்றப்படுவார்கள்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். அங்கு பலத்தை திரட்டும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுகந்தாராய், என்.கே. பிரேம்சந்திரன், கௌரவ் கோகோய், சசி தரூர் மற்றும் அசாருதீன் ஒவைசி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பல எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர், இந்த மசோதாவை அறிமுகம் செய்யவே அவர்கள் கடுமையாக எதிர்த்தனர் அரசியலின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை என விமர்சித்தனர்.

    English summary
    “The Congress is such a secular party. It partners with the Shiv Sena in Maharashtra and ties up with the Muslim League in Kerala,” Shah said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X