டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலால் மாறிய விதிகள்.. பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என முடிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி!.. ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!- வீடியோ

    டெல்லி: அனைத்து மாநில பாஜக தலைவர்களுடன் அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடந்தது. இந்நிலையில் அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில்சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவே தொடருவார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மோடியின் அமைச்சரவையில் அமித்ஷா உள்துறை அமைச்சராகி உள்ளார்.

    Amit Shah hold BJP Meeting today on delhi , Over who as New Party Chief

    பாஜகவின் விதிகளின் படி அமைச்சர் உள்பட அரசின் பொறுப்பில் இருந்தால் கட்சியில் தலைவர் பொறுப்பில் இருந்தால் அவர்கள் விலக வேண்டும்.அதன்படி அமைச்சர் பொறுப்பை ஏற்ற அமித்ஷா விரைவில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.

    கடந்த 2014ம் ஆண்டு ராஜ்நாத் உள்துறை அமைச்சராக பதவியேற்றதால் அமித்ஷா பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றார் இப்போது அமித்ஷா உள்துறை அமைச்சராகி உள்ளதால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேர்வு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதேபோல் பாஜகவில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டியதிருந்தது. இது தொடர்பாக விவாதிக்க டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11 மணிக்கு பாஜக உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பாஜக தலைவர்களும் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.

    அப்போது லோக்சபா தேர்தலில பாஜக 303 இடங்களில் வெற்றி பெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தொடர வேண்டும் என அனைத்து மாநில தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர் இதையடுத்து பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடருவார் என பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    English summary
    Amit Shah hold BJP national leavel Meeting today on delhi , Over who replaced Shah as New Party Chief in bjp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X