டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: திரிபுரா வன்முறைகள் தொடர்பாக புகார் அளிக்க சென்ற தம்மை பாஜகவில் இணையுமாறு அக்கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கேட்டுக் கொண்டதாக சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி. ஜார்னா தாஸ் பரபரப்ப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்களையும் விலைபேசிக் கொண்டிருக்கிறது பாஜக. தற்போது சி.பி.எம். எம்.பி. ஜார்னா தாஸையும் கட்சி தாவ சொல்லியிருக்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா.

திரிபுரா மாநில ராஜ்யசபா எம்..பி.யான ஜார்னா தாஸ், அம்மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து புகார் தெரிவித்த அமித்ஷாவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது திரிபுரா வன்முறைகள் குறித்த ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் ஜார்னா தாஸ் கொடுத்தார்.

முடிந்தனர் இடதுசாரிகள்

முடிந்தனர் இடதுசாரிகள்

அப்போதுதான் கட்சி தாவ அழைப்பு விடுத்திருக்கிறார் அமித்ஷா. இது தொடர்பாக ஜார்னா தாஸ் கூறியதாவது: இடதுசாரிகள் அத்தியாயம் முடிந்துவிட்டது என என்னிடம் அமித்ஷா கூறினார். அது சீரியசாக சொன்னாரா? அல்லது நகைச்சுவைக்காகவா? என தெரியவில்லை.

உள்துறை அமைச்சர் நீங்க..

உள்துறை அமைச்சர் நீங்க..

அத்துடன் நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பாஜக தலைவராக இங்கே சந்திக்கவும் வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன்.

உள்துறை அமைச்சர் நீங்க..

உள்துறை அமைச்சர் நீங்க..

அத்துடன் நான் திரிபுரா பிரச்சனைகளைப் பற்றி பேசத்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களை பாஜக தலைவராக இங்கே சந்திக்கவும் வரவில்லை. இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்கிற அடிப்படையில்தான் உங்களை சந்தித்தேன்.

தனி ஆளா எதிர்ப்பேன்

தனி ஆளா எதிர்ப்பேன்

இதுபோல கட்சி தாவிவிடுங்கள் என்றெல்லாம் பேசக் கூடாது. நான் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதுவும் ராஜ்யசபாவில் நான் மட்டும் எம்.பி. நாங்கள் உங்களை மிக கடுமையாக தொடர்ந்து எதிர்ப்போம். உங்க சித்தாந்தம் வேறானது. உங்களை எதிர்க்கிற வரிசையில் ஒற்றை ஆளாக தனியாக நான் மட்டுமே இருக்கின்ற நிலைவந்தாலும் எதிர்த்துக் கொண்டேதானே இருப்பேனே தவிர கட்சி தாவ மாட்டேன் என கூறிவிட்டேன். இவ்வாறு ஜார்னா தாஸ் கூறினார்.

English summary
CPM Rajyasabha MP Jharna Das Baidya said that Home Minister Amit Shah invited me to join BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X