டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் அமித்ஷா | அயோத்தி விரைகிறார் யோகி ஆதித்யநாத்- வீடியோ

    டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைசிகாலம் வரை வசித்த வீடு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிரதமர் பதவி காலத்துக்குப் பின்னர் 2004-ம் ஆண்டு முதல் மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் பார்க் அரசு இல்லத்தில்தான் வாஜ்பாய் தங்கி இருந்தார். அவரது மறைவைத் தொடர்ர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இந்த அரசு இல்லத்தை வாஜ்பாய் குடும்பத்தினர் அரசிடம் ஒப்படைத்தனர்.

    Amit shah may get Vajpayees Bungalow

    தற்போது அந்த இல்லத்தில் யாரும் வசிக்கவில்லை. இருப்பினும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த அரசு இல்லத்தில் உள்துறை அமைச்ச அமித்ஷா குடியேறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லி அக்பர் சாலையில் உள்ள 11-ம் எண் இல்லத்தில் அமித்ஷா வசித்து வருகிறார். அண்மையில் வாஜ்பாய் வசித்த அரசு இல்லத்துக்கு அமித்ஷா சென்று பார்வையிட்டும் வந்தார்.

    மேலும் வாஜ்பாய் வசித்த அரசு இல்ல பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அந்த இல்லத்தில் அமித்ஷா குடியேறக் கூடும் என கூறப்படுகிறது.

    English summary
    Union Home Minister Amit Shah may get late prime minister Vajpayee's Krishna Menon Marg residence in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X