டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?

லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவில் பிரதமர் மோடியை விட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்... பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவில் பிரதமர் மோடியை விட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இன்று கடைசி கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவில் பிரதமர் மோடிக்கு பதில் வேறு ஒரு நபர் முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதற்கான திட்டங்களில் பாஜக ஏற்கனவே இறங்கிவிட்டது.

    கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.. எடுப்பதற்கு அல்ல.. கேதார்நாத்தில் மோடி திடீர் பிரஸ்மீட்! கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.. எடுப்பதற்கு அல்ல.. கேதார்நாத்தில் மோடி திடீர் பிரஸ்மீட்!

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    லோக்சபா தேர்தலுக்கு பின் மோடியை ஓரங்கட்ட பாஜக முயல்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பாஜக மீது இருக்கும் விமர்சனங்களுக்கு மோடியை காரணம் காட்டலாம். அவரை காரணம் காட்டி கட்சி மீது இருக்கும் குறைகளை மறைக்கலாம் என்று பாஜக நினைப்பதாக தெரிகிறது. அத்வானி போல மோடியின் நிலை மாறலாம் என்கிறார்கள்.

    நிதின் கட்கரி

    நிதின் கட்கரி

    இந்த நிலையில்தான் பாஜகவில் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தது. நிதின் ஆர்எஸ்எஸ் நபர். இவருக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெரிய அளவில் இருக்கிறது. இந்த நிலையில் அவர் மோடிக்கு பதில் கட்சியில் முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக நிறைய தகவல்கள் வந்தது. நிதின் கட்கரி பேசிய சில விஷயங்களும் அதையே உணர்த்தியது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் பாஜக இதைவிட இன்னும் வலிமையான தலைவர் ஒருவரை தேடுவதாக கூறுகிறார்கள். ஆட்சி அனுபவம் மட்டுமில்லாமல், கட்சியை, கூட்டணியை வழிநடத்தும் அனுபவமும் இருக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க அந்த அனுபவம் அவசியம். அதனால் நிதின் கட்கரிக்கு பதில் வேறு ஒரு நபரை பிரதமராக முன்னிறுத்த வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    அமித் ஷாதான்

    அமித் ஷாதான்

    இந்த நிலையில்தான், அமித் ஷாவை முன்னிறுத்த பாஜக முயல்வதாக தெரிவிக்கிறார்கள். அமித் ஷா எப்போதும் தேர்தலில் நிற்பதில் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனால் அவரே தற்போது காந்தி நகரில் போட்டியிடுகிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து அமித் ஷா களமிறங்கி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பாஜகவில் விரைவில் முக்கிய மாற்றம் வர போகிறது என்கிறார்கள்.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    மோடிக்கு எதிராக அமித் ஷா தொடங்கி பாஜகவின் அனைத்து தலைவர்களும் இருப்பதாக கூறுகிறார்கள். மோடியை விட தனக்குத்தான் அதிகமாக தெரியும் என்பதை உணர்த்தவே மோடியை வைத்து செய்தியாளர்களை அமித் ஷா சந்தித்தார். மோடியை ஒரு படி கீழே காட்டிவிட்டு, அமித் ஷாவை எல்லாம் தெரிந்தவர் என்பது போல காட்டியதும் இதற்காகத்தான் என்கிறார்கள். அந்த பிரஸ் மீட் மொத்தமும் இதை நினைவில் கொண்டே நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    அமித் ஷா பின்வரும் திட்டங்களை தேர்தலுக்கு பின் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

    1. அமித் ஷா தன்னையே பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தலாம்.

    2. பாஜகவில் இருக்கும் வேறு ஒரு தலைவரை அமித் ஷா முன்னிறுத்த முயலலாம்.

    3. தனக்கு இருக்கும் சக்தியை வைத்து, மோடியை மீண்டும் பிரதமராக்க முயலலாம், என்கிறார்கள். ஆனால் கடைசி ஆப்ஷன் நடப்பது கஷ்டம்தான்!

    English summary
    BJP chief Amit Shah may run for the top post, if NDA gets less than majority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X