டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரொம்ப மோசம்.. தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் அமித் ஷா.. விரைவில் நடவடிக்கை

லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் சொதப்பி இருக்கும் நிலையில், தமிழக பாஜக மீது தேசிய தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக சொதப்பி இருக்கும் நிலையில், தமிழக பாஜக மீது தேசிய தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக நாடு முழுக்க 303 இடங்களில் வென்றுள்ளது.

பாஜக கூட்டணி மிக அதிகபட்சமாக 353 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் மட்டும்தான் சொதப்பி இருக்கிறது.

விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ! விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ!

சொதப்பல்

சொதப்பல்

அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி மொத்தம் 1 தொகுதியில் மட்டும்தான் வென்றது. பாஜக தலைவர்கள் 5 பேரும் மோசமாக தோல்வியை தழுவினார்கள். அதேபோல் அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் மோசமாக தோல்வியை தழுவியது.

கடுமையான கோபம்

கடுமையான கோபம்

இதனால் தமிழக பாஜக மீது தேசிய தலைவர் அமித் ஷா கடுமையான கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. தமிழக பாஜக தலைவர்கள் சரியாக செயல்படவில்லை. நாளுக்கு நாள் தமிழகத்தில் பாஜக மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இதனால் உடனே நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக பாஜக குறித்து புகார் சென்றுள்ளது.

யார் மீது

யார் மீது

முக்கியமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா, முன்னாள் எம்பி பொன். ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் மீது பாஜக தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு இவர்களை பொறுப்பேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

வருகிறார்கள்

வருகிறார்கள்

இதனால் தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பாஜக தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளுக்கு புதிய நபர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வருகிறது. முக்கியமாக முன்னாள் எம்.பிக்கள், தமிழகத்தில் பிரபலமாக உள்ள தலைவர்கள் பொறுப்பில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

English summary
Lok Sabha Elections Results 2019: Amit Shah may take action against Tamilnadu BJP party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X