டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டம்.. வீதிக்கு வந்த பாஜக.. வீடு வீடாகப் போன அமித் ஷா.. டெல்லியில் அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. கட்சித் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவே நேரடியாக களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று இந்த சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

10 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. வீடு வீடாக சென்று மக்களுக்கு இந்த சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

Amit Shah meets the people on part of BJPs door-to-door campaign on CAA

டெல்லியில் அமித்ஷாவே களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். இதனால் பாஜகவினர் உற்சாகமடைந்தனர். லாஜ்பத் நகரில் உள்ள வீடுகளுக்குச் சென்ற அமித் ஷா அங்குள்ளவர்களிடம் இந்த சட்டத் திருத்தம் குறித்த அம்சங்களை விளக்கிக் கூறினார். மேலும் துண்டுப் பிரச்சாரத்தையும் அவர் குடியிருப்போரிடம் கொடுத்து விளக்கினார்.

இந்த பத்து நாள் பிரச்சாரத்தின்போது 3 கோடி மக்களை நேரில் சந்தித்து சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், மற்ற அமைப்புகளும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதை முறியடிக்கும் வகையில் இந்த பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

அமித்ஷாவைப் போலவே மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கத்காரி, ஜேபி நட்டா உள்ளிட்டோரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 15ம் தேதி வரை இந்த பிரச்சாரம் நீடிக்கும்.

Take a Poll

மஞ்ச கொடியை கட்டிகிட்டு, ஆரவாரமாக வந்த கன்னட அமைப்பினர்.. தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. பரபரப்புமஞ்ச கொடியை கட்டிகிட்டு, ஆரவாரமாக வந்த கன்னட அமைப்பினர்.. தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. பரபரப்பு

English summary
BJP president Amit Shah on Sunday took to the street to meet the people and explain about the salient features of the CAA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X