டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் வந்தாச்சுல்ல.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீட்டுக்கு விரைந்து சென்ற அமித் ஷா!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவர்களான, எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

பாஜக நிறுவனர்களில் ஒருவரான அத்வானி, காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amit Shah met LK Advani and Murli Manohar Joshi

அதேபோல, மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி போட்டியிட வாய்ப்புத் தரப்படவில்லை. பாஜகவின் மூத்த தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் புறக்கணித்து வருவதாக கட்சியின் ஒரு பிரிவினர் நடுவே அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில்தான், தனி நபர்களை விட கட்சிதான் பெரிது, என்று தனது பிளாக்கில் எழுதினார் அத்வானி.

அடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு அடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு

இந்தச் சூழ்நிலையில்தான், பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன் பிறகு டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்திற்கு விரைந்த அமித்ஷா, அத்வானியுடன், ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு முரளி மனோகர் ஜோஷி என் இல்லத்திற்கு சென்ற அமித் ஷா, ஆலோசனை நடத்தியுள்ளார்.

பாஜகவிற்கு உங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் அவசியம் தேவை என்று அமித்ஷா அப்போது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியிடம், வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலமாக, பாஜகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா பதிலடி கொடுக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது,

English summary
BJP president Amit Shah reached upset party veteran Murli Manohar Joshi's home in Delhi today. He also met LK Advani separately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X