டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் நீட்டிப்பு- ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: லோக்சபாவில் அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். மேலும் ஆண்டு இறுதியில் காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சட்டம் ஒழுங்கு குறித்து கடந்த 2 நாட்களாக அம்மாநிலத்தில் முகாமிட்டு ஆய்வு செய்தார் அமித்ஷா. இதையடுத்து லோக்சபாவில் இன்று அமித்ஷா பேசியதாவது:

Amit Shah moves quota bill for JK

ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை தொடர்ந்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ரம்ஜான் மற்றும் அமர்நாத் யாத்திரை ஆகியவற்றை கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை... தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை... தங்க தமிழ்ச்செல்வன்

தற்போதைய நிலையில் சட்டசபை பொதுத்தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆண்டு இறுதியில் காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் 10 கி.மீ சுற்றளவு வசிக்கும் மக்களின் நலன் கருதியே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எந்த ஒரு தரப்பையும் மகிழ்ச்சப்படுத்துவதற்காக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அமித்ஷா தாக்கல் செய்த முதலாவது மசோதாதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Home Minister Amit Shah has moved the J&K Reservation Bill in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X