டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டியர் அமித் ஷா.. உங்க பெயரே நம்மூர் பெயர் இல்ல.. அதை முதல்ல மாத்துங்க.. வரலாற்று ஆய்வாளர் கிண்டல்!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பெயரே இந்திய வம்சாவளி பெயர் கிடையாது என்று வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் கிண்டல் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித் ஷாவின் பெயரே இந்திய வம்சாவளி பெயர் கிடையாது-வரலாற்று ஆய்வாளர்-வீடியோ

    டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பெயரே இந்திய வம்சாவளி பெயர் கிடையாது என்று வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் கிண்டல் செய்துள்ளார்.

    பெயர் மாற்றும் அரசியலை கடந்த ஒரு வருடமாக பாஜக சிறப்பாக செய்து வருகிறது. முதலில் காங்கிரஸ் கொண்டு வந்த சில திட்டங்களின் பெயர்களை மாற்றியது. அதன்பின் விமான நிலையங்களின் பெயர்களை மாற்றியது.

    பெயர் மாற்றி மாற்றி பழகிப்போனவர்கள் பின் முக்கிய நகரங்களின் பெயர்களை மாற்ற தொடங்கினார்கள். முக்கியமாக இஸ்லாமிய பெயர்கள் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றினார்கள்.

    மாற்ற இருக்கிறார்கள்

    அந்த வகையில் அலகாபாத், பிரயாக்ராஜ் என்று மாறியது. பைசாபாத் அயோத்யா என்று மாற இருக்கிறது. இன்னும் சில நகரங்களின் பெயர்களை மாற்றும் யோசனையில் இருக்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் என்ற பெயரையே மாற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    அமித் ஷா பெயர்

    அமித் ஷா பெயர்

    இந்த நிலையில்தான் முதுபெரும் வரலாற்று ஆய்வாளர், இர்பான் ஹபீப் பாஜகவின் இந்த செயலை கிண்டல் செய்துள்ளார். அவர், பாஜக எதனுடைய பெயரையாவது மாற்ற வேண்டும் என்று நினைத்தால் முதலில் அமித் ஷாவில் உள்ள ஷாவைதான் மாற்ற வேண்டும். அது குஜராத்தியோ, இந்தியோ கிடையாது. அது பெர்சியன் மொழி. இஸ்லாமியர்களுக்கு நெருக்கமானதுதான் அதுவும் என்று கூறியுள்ளார்.

    அட குஜராத் பெயர் கூட

    அட குஜராத் பெயர் கூட

    அதோடு நிற்காமல், குஜராத்தி என்ற வார்த்தையே குஜராத்தி கிடையாது என்றும் கூறியுள்ளார். அதுவும் பெர்சியாதான் என்றுள்ளார். குர்ஜராத்ரா என்ற வார்த்தைதான் சரி. அதை மாற்ற வேண்டும். பாஜக ஆளும் குஜராத்தில், அந்த பெயரை மாற்றி பழைய பெயரை வைப்பார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க

    என்ன பாஸ் இப்படி சொல்லுறீங்க

    87 வயது நிரம்பிய இர்பான் ஹபீப் இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர். இவர் இந்த வயதில் கூட அலிகார்க் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இந்த நிலையில் இவரது கருத்தை வைத்து பாஜகவினரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

    English summary
    Amit Shah name itself is not India origin name, Can you Change it? asks a Historian.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X