டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் பவராக மாறும் அமித் ஷா? பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்!

பாஜக தேசிய தலைவர் பதவி குறித்து தற்போது அமித் ஷா மௌனம் கலைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah opens up about the BJP national chief post

    டெல்லி: பாஜக தேசிய தலைவர் பதவி குறித்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மௌனம் கலைத்துள்ளார்.

    பாஜக கட்சிக்குள் ஒரு முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. அந்த கட்சியில் ஒரு நபர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். ஆட்சியில் பதவி கிடைத்தால் கட்சியில் பதவி கிடைக்காது.

    கட்சியில் பதவி கிடைத்தால் ஆட்சியில் பதவி கிடைக்காது. இதை பல வருடங்களாக பாஜக கட்சி மிக தீவிரமாக பின்பற்றி வருகிறது.

    கூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...! மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்கூட்டத்தை கூட்ட அதிமுகவின் பலே ஐடியா...! மேடையில் குட்டைப்பாவாடை ஆட்டம்

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்காக இந்த விதி கொஞ்சம் தளர்த்தப்பட்டது. இவர் உள்துறை அமைச்சராக இருந்தாலும் தற்போது பாஜகவின் தேசிய தலைவராக இருக்கிறார். அதே சமயம் பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே பி நட்டா இருந்து வருகிறார்.

    எப்படி செயல்படுகிறார்

    எப்படி செயல்படுகிறார்

    பாஜகவை மொத்தமாக அமித் ஷா கட்டுப்படுத்துகிறார். இவர் கண்டிப்பாக தலைவர் பதவியில் நீடிப்பார். பாஜகவின் சூப்பர் பவர் தலைவராக அமித் ஷா இருப்பார். கட்சியை இவர்தான் இனி மொத்தமாக வழிநடத்த போகிறார் என்று பலர் இதனால் வரிசையாக தெரிவித்து வந்தனர்.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இதற்கு தற்போது அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் பாஜகவின் தேசிய தலைவராக நீடிக்க போவது இல்லை. பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். வரும் டிசம்பர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட போகிறோம். இது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.

    நான் இல்லை

    நான் இல்லை

    நான் பாஜகவின் சூப்பர் பவர் கிடையாது. யாரையும் நான் பின்னிருந்து இயக்க போவது கிடையாது. கட்சிக்குள் எதையும் நான் கட்டுப்படுத்த போவது இல்லை. புதிய தலைவர் சுதந்திரமாக செயல்படுவார். கட்சி கட்டுப்பாடோடு இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Minister Amit Shah opens up for the first time about the BJP national chief post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X