டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்வாக திறமையில் தமிழகத்திற்கு முதலிடம்.. லிஸ்ட் போட்டு புகழ்ந்த அமித் ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

பல்வேறு நலத் திட்டங்களை துவங்கி வைப்பதற்காக சென்னை வந்த அமித் ஷா, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போன்றோரும் பங்கேற்றனர்.

இதில் அமித் ஷா தமிழக அரசை புகழ்ந்து பேசினார். அவர் கூறியதாவது:

கொரோனா கட்டுப்பாடு மட்டும் இல்லாமல் நிர்வாக திறமையிலும் தமிழகம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது. உடல்நல குறியீட்டில் மாவட்டங்கள் இடையே வேலூர் ,கரூருக்கு முதல் இரு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

Amit Shah praised the Tamil Nadu government

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4400 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், சிசுக்களின் பராமரிப்பில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளது. உலகத்திலேயே மிகவும் தொன்மையான தமிழ் மொழியே உங்களிடம் உரையாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ் உரையாற்ற எனக்கும் ஆசை தான் ; ஆனால் உங்களிடம் தமிழில் பேச முடியாதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது, விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும் மோடி அரசின் 3 சீர்திருத்தங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளித்துள்ளது. எடப்பாடி தலைமையில் ஆன சிறப்பான ஆட்சி தொடரும்.

எடப்பாடி-பன்னீர் செல்வம் தலைமையில் தமிழகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்துவதில் அரசு மட்டும் போராட வில்லை, 130 கோடி மக்களும் போராடுகின்றனர். 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். கொரோனவை கையாளுவதில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது. கொரோனா மட்டும் இல்லாமல் நிர்வாக திறமையிலும் தமிழகம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்துள்ளது.

திமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷாதிமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதிஉதவி திட்டத்தின் கீழ் பலர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 4400 கோடி நிதியுதவியாக அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் 2024 க்குள் வழங்க மத்திய அரசு இலக்கு. கர்ப்பிணிகள், சிசுக்களின் பராமரிப்பு இந்தியாவில் தமிழ்நாட்டைப் போல எங்கும் வழங்கப்படவில்லை.

பாறை போன்ற இந்த அதிமுக ஆட்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்போம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் சென்ட்ரல் என பிரதமர் மோடி அரசுதான் பெயரிட்டது. மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு 32850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

English summary
Union Home Minister Amit Shah has praised the Tamil Nadu government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X