டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூவர் படையின் சபதம்.. காத்திருந்து பழிவாங்கிய அமித் ஷா.. ப.சி குறி வைக்கப்படுவது இதனால்தான்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அமைப்பும் அமலாக்கத்துறையும் கைது செய்ய துடித்துக் கொண்டு இருப்பதற்கு பின் நிறைய முக்கிய காரணங்கள் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்று அமித்ஷா கைது... இன்று ப சிதம்பரத்திற்கும் அதே மிரட்டல்

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அமைப்பும் அமலாக்கத்துறையும் கைது செய்ய துடித்துக் கொண்டு இருப்பதற்கு பின் நிறைய முக்கிய காரணங்கள் இருக்கிறது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் எந்த நொடி வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இவர் தாக்கல் செய்ய முன் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

    ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு

    என்ன தேடல்

    என்ன தேடல்

    நேற்று மாலையில் இருந்து சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப. சிதம்பரத்தை மிக தீவிரமாக தேடி வருகிறார்கள். ப. சிதம்பரம் அவரின் டெல்லி வீட்டிலும் இல்லை, சென்னை வீட்டிலும் இல்லை. இதனால் அவரை எப்படியாவது கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் மிக தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இதற்கு முன்

    இதற்கு முன்

    ப. சிதம்பரத்தை சிபிஐ அமைப்பும் அமலாக்கத்துறையும் கைது செய்ய துடித்துக் கொண்டு இருப்பதற்கு பின் நிறைய முக்கிய காரணங்கள் இருக்கிறது. 10 வருடத்திற்கு முன் அமித் ஷா செய்த சபதம் ஒன்றுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அப்போதில் இருந்து ப. சிதம்பரத்தை எப்படி கைது செய்யலாம் என்று அமித் ஷா துடித்துக் கொண்டு இருந்தார்.

    யார் கைது

    யார் கைது

    2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது அமித்ஷா குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அமித் ஷாவிற்கு அது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அமித் ஷா வெளியே வர படாத பாடுபட்டார். இந்த வழக்குதான் பிரதமர் மோடிக்கும் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது.

    கூகுள் எப்படி

    கூகுள் எப்படி

    அமித் ஷாவும், மோடியும் இந்த களங்கத்தை துடைக்க பெரிய அளவில் கஷ்டப்பட்டனர். கூகுளில் அமித் ஷா என்று போட்டால், அடுத்த வார்த்தையே குஜராத் போலி என்கவுண்டர் என்றுதான் வந்தது. அந்த அளவிற்கு அமித் ஷா இந்த வழக்கால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    முயற்சி

    முயற்சி

    இந்த நிலையில்தான் பாஜக கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ப. சிதம்பரத்தை கைது செய்ய முயன்றது. ஆனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் பெயர் கூட அப்போது சேர்க்கப்படவில்லை. அதேபோல் அப்போது இருந்த சிபிஐ அதிகாரிகளும் அமித் ஷாவிற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. முக்கியமாக அப்போதைய சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசின் உத்தரவுக்கு எல்லாம் தலையாட்டவில்லை.

    யார் வந்தது

    யார் வந்தது

    ஆனால் அதற்கு பின் சிபிஐ இயக்குனராக சில மாதங்களுக்கு முன் ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நெருக்கமான நண்பர். இவர் வந்த பின்புதான் ப. சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் தான் அவருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    10 வருடம் எப்படி

    10 வருடம் எப்படி

    10 வருடமாக அமித் ஷா தேக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் வேகமாக இறக்கினார். வழக்கில் அடுத்தடுத்து ஆதாரங்கள் திரட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரம் மீது இருந்த அதிகாரிகளின் பார்வை அப்படியே ப. சிதம்பரம் மீது மொத்தமாக திரும்பியது.

    மூன்று பேர்

    மூன்று பேர்

    ரிஷி குமார் சுக்லா சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டதை அப்போதே ப. சிதம்பரம் எதிர்த்து இருந்தார். ரிஷி குமார் சுக்லா , அமித் ஷா, மோடி என்ற மூவர் படை சரியாக காய் நகர்த்தி தற்போது ப. சிதம்பரத்தை சிக்க வைத்துள்ளனர். இன்று ஒருவேளை பெயில் கிடைத்தாலும் கண்டிப்பாக ப. சிதம்பரத்தை இவர்கள் அப்படியே போக விடமாட்டார்கள். இந்த வழக்கில் இன்னும் பல அதிரடி திருப்பங்கள் எதிர்காலத்தில் நடக்கும் என்கிறார்கள்.

    English summary
    INX MEDIA CASE: Amit Shah promise and vow to Modi on P Chidambaram case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X