டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனை- அமித்ஷா, ராஜ்நாத்சிங் பார்வையிட்டனர்

Google Oneindia Tamil News

டெல்லி: 1,000 படுக்கைகளுடன் டெல்லியில் உருவாகும் கொரோனா மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

நாட்டில் கொரோனா மிகவும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. டெல்லியில் ஏற்கனவே 10,000 படுக்கைகளுடன் மிக பிரமாண்டமான மருத்துவமனை உருவாக்கப்படுகிறது.

Amit Shah, Rajnath Singh visit 1,000-bed coronavirus hospital

உலகிலேயே மிகப் பெரிய கொரோனா மருத்துவமனையாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு சொந்தமான இடத்தில் 1,000 படுக்கைகளுடன் கொரோனா மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 250 ஐசியூ படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

Amit Shah, Rajnath Singh visit 1,000-bed coronavirus hospital

டி.ஆர்.டி.ஓ மற்றும் டாடா சன்ஸ் இணைந்து 11 நாட்களிலேயே இந்த மருத்துவமனை உருவாக்கி சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Home Minister Amit Shah and Defence Minister Rajnath Singh visited a newly-created temporary hospital with 1,000 beds in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X