டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவின் உள்துறையின் சாதனை பட்டியலில் ஆர்டிகல் 370.. கொரோனா தடுப்பு.. 'இடம் பெறாத சிஏஏ'

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையும், கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதையும் முக்கிய சாதனைகள் என்று அமித் ஷாவின் உள்துறை அமைச்சகம் ஓராண்டு சாதனையாக மேற்கோளிட்டுள்ளது, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி குறிப்பிடவில்லை.

Recommended Video

    நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டுஆகியுள்ளது. இந்த ஓராண்டில் செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே டிவியால் பார்க்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் சாதனை பட்டியலில், இந்தியாவின் வரலாற்று நிகழ்வான அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அகற்றியதில் தொடங்குகிறது, இந்த மசோதா மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனி யூனியன் பிரதேசங்களாக உருவானது.

    மோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?மோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?

    தடுப்பு நடவடிக்கைகள்

    தடுப்பு நடவடிக்கைகள்

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்யை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சகம் ஓராண்டு சாதனையாக மேற்கோளிட்டுள்ளது, மேலும் கொரோனாவை சமாளிக்க மத்திய அரசு நிறைய வளங்களை ஒதுக்கீடு செய்ததாகவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.

    கர்த்தார்பூர் நடைபாதை

    கர்த்தார்பூர் நடைபாதை

    வாயு புயல், மஹா புயல், புல்பூல் மற்றும் ஆம்பன் புயல் ஆகிய சூறாவளிகளை வெற்றிகரமாக மத்திய அரசு கையாண்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சீக்கியர்களின் புனித தலங்களில் ஒன்றான பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் நடைபாதை திறப்பு போன்றவையும் சாதனை பட்டியலில் அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது,

    குடியுரிமை திருத்த சட்டம்

    குடியுரிமை திருத்த சட்டம்

    ஆனால் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. டிசம்பரில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. டெல்லியில் நடந்த கலவரத்தால் பல வாரங்கள் அமைதியின்மை உச்சக்கட்டத்தை அடைந்தது, இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    எல்லை மக்கள்

    எல்லை மக்கள்

    இந்த பட்டியலில் உள்துறை அமைச்சகத்தால் முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருப்பது, ஜம்மு காஷ்மீர், மற்றும் சர்வதேச எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 3% இடஒதுக்கீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது - கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுக்கு மற்றும் 5,300 ஜம்மு-காஷ்மீர் குடும்பங்கள் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    புனித யாத்திரை சாதனை

    புனித யாத்திரை சாதனை

    அமர்நாத் யாத்திரை 2019 ஒரு சாதனை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது; யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பான தரிசனம் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி யாத்திரை கடந்த ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு இந்தியா டுடே செய்தியில் கூறியுள்ளது.

    English summary
    Amit Shah's Ministry of Home Affairs cites Article 370 as achievements, no mention of CAA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X