டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

370 நீக்கத்துக்கு பிறகு.. காஷ்மீரில் ஒரு குண்டு கூட வீணாகலே..அதாவது துப்பாக்கிச்சூடே இல்லை.. அமித்ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரில் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடப்படவில்லை என நாடாளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் பகுதியில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரித்து கொன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் குழுவின் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீரில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார்.

குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு

அமித்ஷா பதில்

அமித்ஷா பதில்

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார்.

விடுதலை

விடுதலை

அவர் கூறுகையில் காஷ்மீரில் தலைவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும்.

காஷ்மீர்

காஷ்மீர்

370 ஆவது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகே காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெறவில்லை. ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. 99.5 சதவீத மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள் என்றார் அமித்ஷா.

யூனியன் பிரதேசம்

யூனியன் பிரதேசம்

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Minister Amit Shah says that after revoking 370 article in Jammu and Kashmir, there will be no gun shot in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X