டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென மருத்துவமனையில் சேர்ந்த அமித் ஷா.. அறுவை சிகிச்சை.. குவிந்த தொண்டர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா இன்று, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அமித் ஷாவுக்கு கழுத்தின் பின்புறத்தில் லிபோமா அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக, பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர்களுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை. சமீப காலமாக தொடர்ந்து, ஏதாவது ஒரு உடல்நல உபாதைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

கண்ணீர் விட்ட டிகே சிவக்குமார்.. ஆடிப்போன காங். தலைகள்.. அமித் ஷா அனுப்பிய வலுவான மெசேஜ்!கண்ணீர் விட்ட டிகே சிவக்குமார்.. ஆடிப்போன காங். தலைகள்.. அமித் ஷா அனுப்பிய வலுவான மெசேஜ்!

பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள்

நீண் காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ் அருண் ஜெட்லி ஆகியோர், ஏறத்தாழ ஓராண்டுக்குள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால், பாஜக தொண்டர்கள் ரொம்பவே சோகமாக உள்ளனர்.

காலை அனுமதி

காலை அனுமதி

இந்த நிலையில், அமித்ஷா இன்று காலை 9 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள கே.டி. மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் பாஜக நிர்வாகிகள் அந்த மருத்துவமனையில் குவிந்தனர். எதற்காக அமித்ஷா அங்கே அனுமதிக்கப்பட்டார், என்பது தெரியாமல் இருந்தது.

கழுத்தில் அறுவை சிகிச்சை

கழுத்தில் அறுவை சிகிச்சை

இந்த நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அமித்ஷாவுக்கு, மயக்க மருந்துகள் வழங்கப்பட்டு, கழுத்தின் பின்புறத்தில் லிபோமாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை கட்சி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பாஜக தொண்டர்கள் ஹேப்பி

பாஜக தொண்டர்கள் ஹேப்பி

மதியம் 12.30 மணியளவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டார். எஸ்ஜி சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு அமித்ஷா, சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பாஜக தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.

English summary
Union home minister and BJP president Amit Shah on Wednesday underwent a minor surgery for removal of "lipoma on the back of his neck" at a private hospital in Ahmedabad, the party said. He was later discharged, the BJP's central media department said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X