டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாணவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும்: அமித்ஷா அப்பீல்

Google Oneindia Tamil News

டெல்லி: போராடும் மாணவர்கள் முதலில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து படித்து தெளிவு பெற வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இது தொடர்பாக அமித்ஷா பேசியதாவது:

Amit Shah urges Students should read CAA

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கத்தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த நாட்டு மக்களில் யாருடைய குடியுரிமையையும் பறிக்க திருத்தம் கொண்டுவரப்படவில்லை.

அயோத்தியில் 4 மாதங்களில் விண்ணை தொடும் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷாஅயோத்தியில் 4 மாதங்களில் விண்ணை தொடும் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா

மத்திய அரசின் புதிய சட்டம் குறித்து மாணவர்கள் படித்து தெளிவு பெற வேண்டும். அரசியல் கட்சிகளின் சதிவலைகளில் சிக்க வேண்டாம்.

சில அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக வதந்திகளை பரப்பி வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன. இவர்களது பிடியில் மாணவர்கள் சிக்க வேண்டாம். இவ்வாறு அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

English summary
Union Home Minister said that the Citizenship (Amendment) Act 2019 will give Indian nationality to refugees facing religious persecution in three neighbouring countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X