டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரச்சனை.. ராஜ்யசபாவில் அமித் ஷா செய்த செம்ம தந்திரம்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah : எதிர்கட்சிகளை சமாளிக்க அமித் ஷா செய்த செம்ம தந்திரம்- வீடியோ

    டெல்லி: ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா என்று சொல்லி எம்பிக்கள் முன்னிலையில் பேச ஆரம்பித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவித்தார்.

    இன்று அதிகாலை முதல் ஜம்மு காஷ்மிரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

    amit shah used super tricks in rajya sabha for jammu kashmir special status cancel bill

    இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதை பற்றி வெளியில் சொல்லாமல் அமைதி காத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக லோக்சபா ராஜ்யசபாவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் என்ன? 370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் என்ன?

    ராஜ்யசபாவில் முதலில் உரையாற்ற வந்த அமித்ஷா காஷ்மீர் இடஒதுக்கீடு தொடர்பாக பேசப்போவதாக கூறி பேச ஆரம்பித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் அப்புறம் இடஒதுக்கீடு குறித்து பேசலாம், முதலில் காஷ்மீரில் பிரச்சனை குறித்து பேசுவோம் என்று கூறினார். இதே கருத்தை மேலும் சில எம்பிக்கள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் காஷ்மீர் இடஒதுக்கீடு என்ற பெயரில் பேச ஆரம்பித்த அமித்ஷா திடீரென ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அத்தோடு அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தும் விட்டார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள் கட்சிகள், வெட்கக்கேடு, வெட்கக்கேடு என்று ஆவேச முழக்கமிட்டனர்.

    இந்த கூச்சல் குழப்பங்களுக்கு இடைய அமித்ஷா உரையை வாசித்தும் முடித்துவிட்டார். இதன் மீது இன்று விவாதம் நடந்து வருகிறது. இந்த மசோதாவுக்கு போதிய ஆதரவு இருப்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேறிவிடும் என்பதால் இனி ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களை போல் ஒரு மாநிலமாக மாறிவிடும், இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமும் அங்கு பொருந்தும்.

    English summary
    jammu kashmir special status cancel bill, home minister amit shah used super tricks in rajya sabha
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X