டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷா vs ப.சிதம்பரம்.. நாளை இப்படி ஒரு விவாதம் நடந்தா செமையா இருக்கும்.. எகிறும் எதிர்ப்பு!

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு அவர் எப்படி பதில் அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி

என்ன நேரம்

என்ன நேரம்

நாளை ராஜ்யசபாவில் இதன் மீதான விவாதம் நடத்த 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீதான அறிமுக உரையை அமித் ஷா ஆற்றுவார். இதற்கு எதிராக நாளை அவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் என்ன பேசும் என்று எதிர்பார்ப்பு இதனால் அதிகரித்துள்ளது.

என்ன மசோதா

என்ன மசோதா

அதேபோல் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 106 நாட்கள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருந்து விட்டு ப. சிதம்பரம் கடந்த வாரம்தான் வெளியே வந்தார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

அவர் வெளியே வந்த உடனே மத்திய அரசின் திட்டங்களை, பொருளாதார சீர்கேட்டை கடுமையாக விமர்சித்தார். முக்கியமாக அவர் காஷ்மீர் குறித்தும் பேசினார். அதில், காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜக பறித்துள்ளது, என்றார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்த நிலையில் நாளை அவர் கண்டிப்பாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து பேசுவார். இதற்கு அமித் ஷா கண்டிப்பாக பதில் அளிப்பார். அதனால் நாளை ராஜ்யசபா அமித் ஷா vs ப. சிதம்பரம் என்று இருக்க போகிறது. இதனால் நாளை அவை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Amit Shah vs P Chidambaram: They may debate on the Citizenship amendment in the Rajya Sabha tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X