டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லா தேவைக்கும் இனி ஒரே அடையாள அட்டைதான்.. சென்சஸ் எடுக்கும் செல்போன் ஆப்.. அமித் ஷா அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah | Digital census 2021 | மக்கள் தொகை எடுக்கும் செல்போன் ஆப்: அமித் ஷா அதிரடி

    டெல்லி: ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை ஒரே அடையாள அட்டைக்குள் கொண்டுவர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார்.

    டெல்லியில், இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, அமித் ஷா பேசியதாவது:

    நமக்கு ஏன் ஒரு பல்நோக்கு அடையாள அட்டை இருக்க கூடாது? அந்த அட்டையில் பாஸ்போர்ட், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் அனைத்தும் இருக்க வேண்டும்.

    மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்மோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்

    பாஸ்போர்ட், ஆதார்

    பாஸ்போர்ட், ஆதார்

    நாட்டில் தற்போது பல அடையாள அட்டைகள் உள்ளன. அதாவது, ஆதார், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அட்டைகள். அவை முகவரி மற்றும் புகைப்பட அடையாள அட்டைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒரே அட்டையில் ஒருங்கிணைக்கலாம்.
    இது மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கையும் இந்த அட்டையுடன் இணைக்க வேண்டும்.

    சிந்தனை மாற்றம்

    சிந்தனை மாற்றம்

    நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமரான பிறகு, நமது சிந்தனை திறன் மாறத் தொடங்கியது. நாட்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிப்பதற்காக இதுபோன்ற திட்டமிடல் 2014 க்குப் பிறகு தொடங்கியது. இது சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுக்கு வழிவகுத்தது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு

    மக்கள் தொகை கணக்கெடுப்பு

    ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டுக்கு வீடு வீடாக செய்யப்படாது. மொபைல் ஆப் மூலம் செய்யப்படும். ஒரு நபர் இறக்கும் போது இந்த தகவல்கள் தானாக மக்கள் தொகை தரவுகளில் சேர்க்கப்படும் வகையில் ஒரு அமைப்பும் இருக்க வேண்டும்.

    டிஜிட்டல்

    டிஜிட்டல்

    நாட்டின் கடைசி நபரின் வளர்ச்சி மற்றும் நாட்டின் எதிர்கால பணிகளை ஒழுங்கமைப்பதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் டிஜிட்டல் தரவு மூலம், பல வகையான பகுப்பாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பல மாற்றங்கள் மற்றும் புதிய முறைகளுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Union Home Minister Amit Shah mooted the idea of a multipurpose identity card for citizens with all utilities like Aadhaar, passport, driving licence and bank accounts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X