டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.43 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது.. தோனியை விசாரிக்க வேண்டும்.. அம்ரபலி வழக்கில் புதிய பரபரப்பு!

அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amarapali Dhoni | அமரபள்ளி வழக்கில் திடுக் திருப்பம்! தோனிக்கு சிக்கல்?- வீடியோ

    டெல்லி: அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் தோனிக்கு நெருக்கமான நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் மல்டி பிஸ்னஸ் நிறுவனமான அம்ரபலி குரூப்ஸ் நிறுவனம் தற்போது ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கி இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு 10 வருடமாக வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    2006ல் நொய்டாவில் 2500க்கும் அதிகமான மக்களை இந்த நிறுவனம் பணம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்காமல் ஏமாற்றி உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    தடை சட்டம்

    தடை சட்டம்

    இந்த நிறுவனம் மோசடி செய்தது தெரிய வந்ததை அடுத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, இதன் உரிமத்தை தற்போது உச்ச நீதிமன்றம் பறித்துள்ளது. அதேபோல் இந்த நிறுவனம் செய்த மோசடி, வாங்கிய கடன்கள் என அனைத்து விஷயங்கள் குறித்து விசாரிக்கும்படி ஆடிட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    என்ன புகார்

    என்ன புகார்

    அதேபோல் அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக தோனிக்கு நெருக்கமான அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்ஷிதான் இயக்குனர். இந்த இரண்டு நிறுவனத்திலும் தோனிக்கு பெரிய அளவில் பங்குகள் இருக்கிறது.

    என்ன விளம்பரம்

    என்ன விளம்பரம்

    இந்த இரண்டு நிறுவனத்திற்கும் தோனி விளம்பர தூதராக இருந்துள்ளார். அவர்களின் போர்ட் சந்திப்புகளில் தோனி கலந்து கொண்டு இருக்கிறார். இதனால் அவரையும் இதில் விசாரிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். இதனால் தோனி விரைவில் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    எவ்வளவு பணம்

    எவ்வளவு பணம்

    அம்ரபலி குழுமமானது, அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு முறைகேடாக பணம் அனுப்பி உள்ளது. மக்களிடம் பெற்ற பணத்தை வீடு கட்ட பயன்படுத்தாமல், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அம்ரபலி குழுமம் அனுப்பி உள்ளது. 2009-2015 ஆண்டுகளில் மொத்தம் 43 கோடி ரூபாயை இந்த நிறுவனம் அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுப்பி இருக்கிறது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இந்த பணத்தை உடனடியாக மீட்டு உரியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பண மோசடி குறித்தும் விரைவில் அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    அதன்படி அம்ரபலி மூலம் தான் வாங்கிய 5500 ஏக்கர் வீட்டிற்கு முழு உரிமை தனக்குத்தான் இருக்கிறது. அம்ரபலி நிறுவனம் அதை அபகரிக்க பார்க்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amrapali Groups Case: Dhoni may face action against Money Laundering Complaint.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X