அந்த நேரத்தில் 27 வயது குறைவான இளம் மனைவியை கடித்து வைத்த முதியவர்.. பல் செட்டை பிடுங்க உத்தரவு
டெல்லி: குஜராத் மாநிலத்தில் தன்னை விட 27 வயது குறைவான இளம்பெண்ணை திருமணம் செய்த தொழிலதிபர் அவரை உடலுறவின்போது கடித்து வைத்த கொடுமை செய்ததால் ,ஜாமீன் வழங்க மறுத்ததோடு அவரது பல் செட்டை பிடுங்கி சமர்ப்பிக்கும்படி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருமணமான பெண்களுக்கு கணவர் மூலமும், மனைவிகள் மூலம் கணவர்களுக்கும் வன்கொடுமைகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தன்னைவிட இளவயதுப் பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குவது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான பல்வேறு வழக்குகளும் மக்கள் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

குஜராத்தில் அதிர்ச்சி
இந்த நிலையில் தன்னை விட 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த தொழிலதிபர் ஒருவர், சந்தேகம் மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக அவரை உடலுறவின் போது பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து வைத்து கொடுமை செய்த சம்பவம் குறித்து அப்பெண்னே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 67 வயதான கிருஷ்குமார் சோனி என்பவர் நகைத்தொழில் ஈடுபட்டுள்ளார். மிகப் பெரும் செல்வந்தரான அவருக்கு குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது.

கொடூர கணவன்
இந்த நிலையில் மனைவி இறந்த நிலையில் தனக்கு வாழ்க்கை துணை தேவை எனக் கருதிய கிருஷ்குமார் கடந்த மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட 27 வயது இளையவரான அந்தப் பெண்ணை திருமணம் செய்து குஜராத் அழைத்து வந்து தங்கியுள்ளார். திருமணம் ஆன அன்று நடைபெற்ற முதலிரவின் போதே வயதான கணவரான கிருஷ்குமார் அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது அவரது உடல் முழுவதும் பல்லால் கடித்து வைத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். அப்போது அப்பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போது தான் விளையாட்டுக்காக தான் அப்படி செய்தேன் என கூறி நிலையில் தொடர்ந்து அவரை உடல் முழுவதும் கடித்து வைத்த பெண் காயம் அடைந்து இருக்கிறார்

பல்லால் கடித்து வைத்து ..
இது ஒரு நாள் மட்டுமல்ல தொடர்ந்து பல நாட்கள் இதே கொடுமை அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்து நிகழ்வுகளில் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக சொல்லியபோது கிருஷ்குமார் அப்பெண்ணை கடுமையாக மிரட்டி உள்ளார்.தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதால் முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது இது குறித்து வெளியே கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது இதையடுத்து குடும்ப சூழ்நிலை கருதி அச்சமடைந்த அப்பெண் இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்.

போலீசில் புகார்
இதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட கிருஷ்குமார் தொடர்ந்து அவரிடம் அத்துமீறி உள்ளார் ஒரு கட்டத்தில் உயிரே போனாலும் பரவாயில்லை என தனது கணவரின் கொடுமை குறித்து கடந்த டிசம்பர் மாதம் அவரிடம் இருந்து தப்பித்த பெண் தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் இந்த ஊருக்கு வந்து அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். இத்தனைக்கும் தனது கணவருக்கு வயோதிகம் காரணமாக பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன எனவும் , இருந்தும் அவர் பல்செட்டை பொருத்தி தன்னை கொடுமை படுத்தியதாகவும் புகாரில் கூறி உள்ளார்.

பல்செட் கிழட்டு சிங்கம்
இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேலும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடப்படும் என கூறிய நீதிபதி முதலில் கிழட்டு சைக்கோவின் பல் செட்டை பிடுங்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதியில் இருந்தே கிழட்டு சைக்கோ கிருஷ்குமார் சோனி தலைமறைவாக இருப்பதாக போலீசார் கூறிய நிலையில் அவரை கைது செய்ய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.