டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியர்களும் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற்று விட வேண்டும் என டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் துணை அதிபராக கமலா ஹாரீஸை அறிவித்ததன் மூலம் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் கிட்டதட்ட வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறலாம்.

    கமலா ஹாரீஸ் தேர்வு சரியான தேர்வும் என்பதாலும் அவர் வருங்காலத்தில் அமெரிக்காவின் அதிபராகவும் பதவி உயர முடியும் என்பதாலும் அமெரிக்காவிலும், இந்தியாவில் உள்ளவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

    அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

    ஆனந்த் மகிந்திரா

    ஆனந்த் மகிந்திரா

    அந்த வகையில் மகிந்திர குழுமத்தின் தலைவர் ஆனந்த மகிந்திரா ட்விட்டரில் கூறுகையில் கமலா ஹாரீஸ் குறித்த அறிவிப்பை இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் வெறும் இந்தியர் என்ற அளவில் மட்டும் சுருக்கிவிடாதீர்கள். அவரை அதையும் தாண்டி சிறப்பானவர். இனம், எல்லைகளை கடந்த உலகை நிர்மானிக்க வேண்டும் என்ற கனவுகள் உள்ளவர் என தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் பக்கம்

    ட்விட்டர் பக்கம்

    அதுபோல் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நோயி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கமலா ஹாரீஸை துணை அதிபராக ஜோபிடனின் தேர்வு என்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. கமலாவை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். அவர் மிகவும் புத்திசாலி, அன்பானவரும் கூட, நாட்டின் மிகச் சிறந்த தேர்வு என்றார்.

    விஜய சேகர் ஷர்மா

    விஜய சேகர் ஷர்மா

    பே டிஎம் நிறுவனர் விஜய சேகர் சர்மா, ஒரு செய்தியை மேற்கோள் காட்டி கமலா ஹாரீஸ் கருப்பின பெண்ணா என கேட்டுள்ளார். அதற்கு சிலா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷாமீர் கர்கால் கூறுகையில் அவர் கருப்பினத்தையும் சேர்ந்தவர். இந்தியரும் ஆவார் என பதில் அளித்துள்ளார்.

    கிரண் மஜும்தார்

    கிரண் மஜும்தார்

    பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டரில் தனது தாத்தா மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் கமலா ஹாரீஸின் புகைப்படத்தை ஷேர் செய்து கமலாவை ஊக்கப்படுத்திய தாத்தா இவர்தான் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கமலாவின் சகோதரி மாயா, தாத்தா பிவி கோபாலன், பாட்டி ராஜம் கோபாலன், உறவினர் மீனா உள்ளிட்டோர் உள்ளனர்.

    சமையல் கலைஞர்

    சமையல் கலைஞர்

    மிசிலினின் முன்னணி சமையல் கலைஞரான விகாஸ் கண்ணா கூறுகையில் நான் 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறேன். இந்திய அமெரிக்கருக்கு அதிபர் தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இதுதான் புதிய அமெரிக்காவின் எழுச்சி என தெரிவித்துள்ளார்.

    English summary
    Anand Mahindra praises Kamala Harris to be nominated as US Vice President candidate 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X