டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு முடிவு - ஆந்திரா ஹைகோர்ட் நீதிபதி டிரான்ஸ்பர்

ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி உள்பட உட்பட பல உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் ஜே.கே மகேஸ்வரி சிக்கிம் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் ஒடிசாவின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல அலகாபாத், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் என்.வி.ரமணாவின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

Andhra High Court Justice J.K. Maheshwari Transfer

என்.வி, ரமணாவுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படும் முன்பு அங்கு ரமணாவின் மகள்களின் சில நில ஒப்பந்தங்கள் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்ததாகவும் எட்டு பக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சில மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்திற்கு இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி சிக்கிம் மாநிலம் காங்டோக்கிற்குச் செல்கிறார், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருப்குமார் கோஸ்வாமி தெற்கு நோக்கி நகர்கிறார்.

கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்.. ஆந்திரா மர்ம நோய்க்கு ஈயம் காரணம்.. பரபர தகவல் கொத்துக்கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்.. ஆந்திரா மர்ம நோய்க்கு ஈயம் காரணம்.. பரபர தகவல்

தற்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி எஸ்.முரளிதர், ஒரிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்த பரிந்துரைக்கப்படுகிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்படுகிறார், அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோஹ்லி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

English summary
JK Maheshwari of Andhra Pradesh High Court has been transferred as Sikkim High Court Judge. Punjab and Haryana High Court Judge S.K. It has been reported that the Supreme Court has recommended that Muralitharan be transferred as the Chief Justice of Odisha with promotion. Similarly, Allahabad and Delhi High Court judges have also been recommended for transfer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X