டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல்.. முதலிடத்தில் ஆந்திரா.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

Google Oneindia Tamil News

டெல்லி: தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14வது இடம் பிடித்துள்ளது. இதில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

வருடா வருடம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியல் மத்திய அரசு மூலம் வெளியிடப்படும். மாநில அரசின் ஒத்துழைப்பு, மாநில அரசு கொண்டு வரும் சட்டங்கள், மக்களின் ஒத்துழைப்பு, மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, முதலீடுகள் என்று பல விஷயங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காரணியாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த வருடத்தில் தொழில் தொடங்குவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்த மாநிலங்கள் எவை, எங்கு எல்லாம் எளிமையாக தொழில் தொடங்க முடியும் என்று மத்திய அரசு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது.

தமிழகம் எங்கே

தமிழகம் எங்கே

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14 இடம் பிடித்துள்ளது. இதில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. உத்தர பிரதேசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உத்தர பிரதேசம் இந்த பட்டியலில் முன்னேறி உள்ளது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை உத்தர பிரதேசம் மாற்றியதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா நிலைய

தெலுங்கானா நிலைய

உத்தர பிரதேசத்திற்கு அடுத்து தெலுங்கானா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. தெலுங்கானா இந்த பட்டியலில் ஒரு இடம் பின்தங்கி உள்ளது. கடந்த வருடம் இந்த பட்டியலில் தெலுங்கானா இரண்டாம் இடம் வகித்து இருந்தது. முதல் 10 இடங்களில் இரண்டு தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமே இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த லிஸ்ட்

அடுத்த லிஸ்ட்

4வது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. 5வது இடத்தை ஜார்கண்ட் பிடித்துள்ளது. இந்த மாநிலங்கள் புதிய தொழிலாளர் விதிகளை கொண்டு வந்துள்ளது. உத்தர பிரதேசமும் தொழிலாளர் சங்கம் அமைக்க கூடாது என்று விதிகளை மாற்றியது குறிப்பிடத்தக்கது. சட்டீஸ்கர் 6வது இடத்திலும், இமாசலப்பிரதேசம் 7வது இடத்திலும் உள்ளது.

குஜராத் எங்கே

குஜராத் எங்கே

8வது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது. 9வது இடத்தை மேற்கு வங்கம் பிடித்துள்ளது. 10வது இடத்தில் குஜராத் உள்ளது. முதல் 10 இடங்களில் கேரளா இடம்பெறவில்லை. அதேபோல் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படும் கர்நாடாகவும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. கடந்த முறை 3ஆம் இடத்தில் இருந்த ஹரியானா இந்த முறை 10 இடங்களுக்குள் எங்கும் இடம்பிடிக்கவில்லை.

English summary
For the second time, Andhra Pradesh tops in the ease of doing business states, Tamilnadu at 14th place .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X