டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை நீதிபதிக்கு எதிரான சதி.. அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு.. பகீர் புகார்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக செய்யப்பட்ட சதியில் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிபதிக்கு எதிரான சதி: அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு- வீடியோ

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக செய்யப்பட்ட பாலியல் புகார் சதியில் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்து இருக்கிறார்.

    இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரம் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் தீபக் குப்தா, ரோஹிங்க்டன் நாரிமன் அமர்வு விசாரிக்கிறது.

    தலைமை நீதிபதிக்கு எதிராக சதியா? விசாரணை குழு அமைப்பு.. சிபிஐ, உளவுத்துறை உதவ அதிரடி உத்தரவு! தலைமை நீதிபதிக்கு எதிராக சதியா? விசாரணை குழு அமைப்பு.. சிபிஐ, உளவுத்துறை உதவ அதிரடி உத்தரவு!

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    இந்த வழக்கில் பெயின்ஸ் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் இருக்கிறது. இந்த நேற்று வழக்கில் நடந்த விசாரணையில் அவர் மிக முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டார். இந்த சதிக்கு பின் முக்கியமான தொழிலதிபர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று பெயின்ஸ் நேற்று கூறினார்.

    யார் பெயர்

    யார் பெயர்

    நரேஷ் கோயல் என்ற நபரின் பெயரையும் வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் நேற்று குறிப்பிட்டார். நரேஷ் கோயல்தான் ஜெட் ஏர்வேஸை தொடங்கியவர். இவர் மீது வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இன்னும் பலரின் பெயரை பட்டியலிடுவேன் என்றும் அவர் கூறினார்.

    அம்பானி பெயர்

    அம்பானி பெயர்

    அதேபோல் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் அனில் அம்பானியின் பெயரை குறிப்பிட்டார். ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த சதிக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் அனில் அம்பானியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் நாரிமன் இந்த வழக்கை விசாரித்தார். இதில் அனில் அம்பானி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை உச்ச நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் இருவர் மாற்றி வெளியிட்டனர். அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று தீர்ப்பை மாற்றி வெளியிட்டார்கள். இதனால் இந்த பணியாளர்கள் இருவரும் ரஞ்சன் கோகாய் மூலம் பணியை விட்டு நீக்கப்பட்டார்கள்.

    என்ன நடவடிக்கை

    என்ன நடவடிக்கை

    இவர்கள்தான் தற்போது தலைமை நீதிபதிக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளார்கள். இவர்கள் அனில் அம்பானிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று பெயின்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அனில் அம்பானியின் பெயர் நேரடியாக அடிபடுவதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    English summary
    Anil Ambani 's close aides were involved in the plot to frame the CJI says Baines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X