டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி!?

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெர்மனியை கட்டி ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லரின் பாதையை சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் அப்படியே பின்பற்றுவது அம்பலமாகி உள்ளது. இரண்டு தலைவர்களின் செயல்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது.

வரலாறு திரும்புகிறது.. என்ற வாக்கியம் உலகம் முழுக்க பிரபலம். உலகம் முழுக்க நடந்த வரலாறுதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது. வெவ்வேறு பகுதியில், வெவ்வேறு பெயரில் ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் நடந்தேறி வருகிறது.

ஒரே கொள்கை கொண்ட தலைவர்கள் பிறக்கிறார்கள், போர்கள் நடக்கிறது, சர்வாதிகாரிகள் பிறக்கிறார்கள், ஒரே விஷயம் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு வரலாறைதான் இந்த உலகம் மீண்டும் பார்க்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    அதே ஒற்றுமை.. ஹிட்லர் வழியை பின்பற்றும் ஜி ஜிங்பிங்

    ஜெர்மனி மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகளை ஆட்டிப்படைத்த ஹிட்லரின் வரலாறு மீண்டும் திரும்ப தொடங்கி உள்ளது. இந்த முறை சீன அதிபர் ஜி ஜிங்பிங் வடிவில் அதே சர்வாதிகார வரலாறு மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளது.

     மீண்டும் வரலாறு

    மீண்டும் வரலாறு

    ஆம் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் அதே அரசியல் திட்டங்களையும், சட்டங்களையும் சீன அதிபர் ஜிங்பிங் அப்படியே பின்பற்றுகிறார். கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியே ஹிட்லர் நடந்த பாதையிலேயே ஜிங்பிங் செல்கிறார். இருவரும் அரசியலுக்கு வந்ததும், மக்களை கவர்ந்ததும், ராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும், பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தியதும் அப்படியே ஒரே மாதிரி இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

     ஹிட்லர் எப்படி

    ஹிட்லர் எப்படி

    20ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஆட்சி செய்து வந்த ஹிட்லர், அந்த நாட்டை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, உலகின் வரலாற்றையே ஆட்டிப்படைக்க தயாராக இருந்தார். ஜெர்மனியில் இவர் நடத்திய சர்வாதிகார
    ஆட்சி, யூதர்கள் மீதான தாக்குதல் எல்லாம் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக மாறியது. இவரின் சர்வாதிகாரம் இப்போதும் கூட உலக அரசியலில் மாபெரும் கரையாக பார்க்கப்படுகிறது.

     என்ன ஒற்றுமை

    என்ன ஒற்றுமை

    உலகப்போருக்கு காரணமாக இருந்த அதே ஹிட்லருக்கும் சீனாவின் அதிபர் ஜிங்பிங்கிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது என்று கூறினால், நம்புவீர்களா? இரண்டு பேரின் அரசியல் பயணமும் ஏறக்குறைய ஒரே மாதிரியானதுதான். 1929-1932 ஏற்பட்ட மாபெரும் பொருளாதர வீழ்ச்சி காரணமாக ஜெர்மனியில் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்தது. மக்கள் வீதிக்கு வந்தனர். வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. வறுமை வாட்டியது.

    கோபம்

    கோபம்

    இந்த வறுமைக்கு எல்லாம் காரணம் யூதர்கள்தான் என்று பிரச்சாரம் செய்த ஹிட்லர், அதே யூத எதிர்ப்பு மூலம் ஆட்சிக்கும் வந்தார். பொருளாதார சரிவில் இருந்து உங்களை மீட்கிறேன், யூதர்களிடம் இருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன் என்ற உத்தரவாதத்துடன் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஜிங்பிங் ஆட்சிக்கு வந்ததும் இப்படித்தான். 2007-2009 உலகம் முழுக்க பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது.

     சீனாவின் கதை

    சீனாவின் கதை

    சீனா, ரஷ்யா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளும் பெரும் சரிவை சந்தித்தது. சீனாவின் மோசமான பொருளாதார சரிவு காரணமாக அங்கு நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் நிலைக்கு சென்றது. இந்த பொருளாதார சரிவை மீட்டு கொண்டு வருவேன் எந்த சத்தியதுடன் ஹிட்லர் போலவே ஜிங்பிங்கும் சீனாவின் அரியணையில் ஏறினார். இரண்டுக்கும் ஒரே பின்னணி கதைதான்.

     சில வருடம்

    சில வருடம்

    ஹிட்லர் ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் தனக்கு இருந்த அரசியல் எதிரிகளை கைது செய்தார் அல்லது கொலை செய்ய உத்தரவிட்டார். கிரேகர் ஸ்டிரெஷர், ஸ்டிரைகர் ரிக், வான் பிரிட்டோ என்று பலரை கொலை செய்ய உத்தரவிட்டார். அதேபோல்தான் 2014-2017 வரை சீனாவில் தனக்கு எதிராக இருந்த அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஜிங்பிங் கைது செய்து சிறையில் அடைத்தார். போஷ் சிலா, ஷு யாங் காங், குவா அங்சாங், ஷியா யாங் என்று எல்லோரையும் கைது செய்தார் ஜிங்பிங்.

    ராணுவம்

    ராணுவம்

    1933-1934 ஆண்டுகளில் தனது நாட்டில் இருக்கும் போலீஸ், ராணுவம் என்று அனைத்து துறைகளையும் ஹிட்லர் தனது நேரடி கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். ஜெர்மனியின் ராணுவ தளபதிகள் கொலை அல்லது கைது செய்துவிட்டு மொத்தமாக படைகளை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். 2014-2019ல் சீனாவின் அனைத்து படைகளையும் ஹிட்லர் போலவே ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். பிஎல்ஏ ராணுவம் தொடங்கி அனைத்து படைகளையும் தனக்கு கீழ் ஜிங்பிங் கொண்டு வந்தார். ராணுவத்தின் தளபதிகள் 6க்கும் மேற்பட்டோரை ஜிங்பிங் கைது செய்து சிறையில் அடைத்தார்.

     நானேதான் மையம்

    நானேதான் மையம்

    1934-1935 ல் ஜெர்மனியின் அனைத்து அதிகார மையங்களை தனக்கு கீழ் ஹிட்லர் கொண்டு வந்தார் . ராணுவ தளபதி, பிரதமர் , அதிபர் எல்லாம் நான்தான் என்று ஹிட்லர் அறிவித்தார். அதேபோல்தான் சீனாவிலும் 2014-2018ல் சீனாவின் அனைத்து உச்சபட்ச அதிகாரங்களையும் ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். நாட்டின் ஒரே தலைவர் நான்தான் என்று ஜிங்பிங் அறிவித்தார். அதே அதிகார வெறி.

    தலைவர்

    தலைவர்

    1935ல், ஜெர்மனியின் ஒரே தலைவர் (fuehrer) நான்தான் என்று ஹிட்லர் அறிவித்தார். எல்லோரும் எனக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்று ஹிட்லர் அறிவித்தார். இதற்கா hail hitlar வாசகம் உருவாக்கப்பட்டது. அதேபோல் 2017 ஜிங்பிங் சீனாவின் மையம் (core) நான்தான் என்று அறிவித்தார் . எல்லோரையும் என்னை புகழ வேண்டும், நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று ஜிங்பிங் அறிவித்தார்.

     போர் எப்படி

    போர் எப்படி

    இரண்டு நாடுகளிலும் ஊடங்கங்கள் இரண்டு நாட்டு அதிபர் மூலமும் நேரடியாக கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. போருக்கு ஏற்றபடி 1933ல் இருந்தே ஜெர்மனியின் அனைத்து படைகளையும் ஹிட்லர் தயார்படுத்தி வந்தார். ஜெர்மனியின் விமானப்படை பலம் பிரிட்டிஷ் விமானப்படை பலத்தை முந்தியது. இதேபோல் ஜிங்பிங் 2013ல் இருந்தே போருக்கு தயார் ஆகும் வகையில் படைகளை பலப்படுத்தி வருகிறார். சீனாவின் கடற்படை அமெரிக்காவின் கடற்படை பலத்தை ஏற்கனவே முந்திவிட்டது. இரண்டு நாட்டு படைகளின் பலமும் ஒரே மாதிரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

     நில ஆக்கிரமிப்பு

    நில ஆக்கிரமிப்பு

    1935ல் ஹிட்லர் தனது படையை சார்லாண்ட், ரைன்லாண்ட் ஆகிய சுதந்திர பகுதிகளுக்கு அனுப்பி ஆக்கிரமிப்பை செய்தார். அதேபோல் 2015 ஜிங்பிங் தனது பிஎல்ஏ படைகளை ஸ்பார்ட்டலி தீவிற்கு அனுப்பு அந்த பகுதியை முறைகேடாக கைப்பற்றினார். இரண்டும் ஒரே மாதிரி செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு ஆகும். 2020ல் ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை ஜிங்பிங் கொண்டு வந்தார். 1938ல் ஆஸ்திரியாவை ஜெர்மன் உடன் இணைத்தார் ஹிட்லர். அதேபோல் கொஞ்சமும் மாற்றமின்றி 2019ல் தைவானை சீனாவுடன் இணைப்பதாக ஜிங்பிங் அறிவித்தார்.

     அண்டை நாடுகள்

    அண்டை நாடுகள்

    அதேபோல் 1938-1939 வரை அண்டை நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமிக்க தொடங்கினார். அந்த நிலம் வரலாற்று ரீதியாக எங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அண்டை நாட்டு நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினார். 2019-2020ல் அதேபோல் பூடான், இந்தியா, நேபாளம், வங்கதேசம் என்று பல நாடுகளின் இடங்களை சீனாவின் படைகள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. ஹிட்லர் போல ஜிங்பிங்பிங்கும் நில ஆக்கிரமிப்பில் இறங்கி உள்ளார்.

     போர் இறங்கினார்

    போர் இறங்கினார்

    1939ல் போலந்து மீது தாக்குதல் நடத்திய ஜெர்மனி இரண்டாம் உலக போருக்கு வித்திட்டது. எல்லையை கடந்து போலந்து மீது தாக்குதல் நடத்தும்படி ஜெர்மனி படைகளுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். அதேபோல்தான் லடாக்கில் மே 5ம் தேதி சீன படைகள் எல்லை மீறியது. மேலும் கால்வானில் படைகள் உள்ளே புகுந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த பதற்றம் இன்னும் தணியவில்லை.

     அப்படியே இருக்கிறது

    அப்படியே இருக்கிறது

    தெரிந்தோ, தெரியாமலோ அப்படியே ஹிட்லரின் பாதையில் ஜிங்பிங் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆட்சிக்கு வந்ததும், அதீத கட்டுப்பாடு, ராணுவ ஆட்சி, ஒருவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு, இன்னொருவருக்குஉய்கூர் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு, போருக்கு ஆயத்தம் என்று இரண்டு தலைவர்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளது. இதுதான் தற்போது உலக நாடுகளை சீனாவிற்கு எதிராக திரும்ப வைத்துள்ளது. இன்னொரு சர்வாதிகாரி உருவாகிவிட கூடாது என்று உலக நாடுகள் சீனாவின் வாலை இப்போதே நறுக்கி தொடங்கி உள்ளது.

    இரண்டு தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் அனைத்தும் StratNewsGlobal என்ற யூடியூப் பக்கம் மூலம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நீக்கும்படி இந்தியாவில் இருக்கும் சீன தூதரகம் புகார் அளித்துள்ளது.

    English summary
    Another Dictator: Chinese President Xi follows the path of German ruler Hitler - The similarities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X