சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம்-டெல்லி கோர்ட் ஜாமீன்
டெல்லி: சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
2019-ம் ஆண்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி முதல் கன்னியாகுமரி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. 2019-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் மதமோதல்களை தூண்டும் வகையில் ஷர்ஜீல் இமாம் பேசினார் என்பது வழக்கு.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஷர்ஜீல் இமாம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ஷர்ஜீல் இமாம், மத மோதல்களைத் தூண்டும் வகையில் பேசியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஷர்ஜீல் இமாம் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ்குமார் ஷரீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் ஜனவரி 6-ந் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; ஜனவரி 23-ந் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஷர்ஜீல் இமாம் மீது அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய ஷர்ஜீல் இமாம் பேச்சு:
மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட்
கன்னையா குமாரின் பேச்சினை கேட்க 5 லட்சம் பேர் கூடினார்கள். இந்த 5 லட்சம் பேர் இருந்தால் இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை தனியாக துண்டித்துவிடலாம். நிரந்தரமாக இல்லையென்றாலும் குறைந்தது ஓரிரண்டு மாதங்களுக்காக அதை செய்யலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போது தான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள். டெல்லியில் பல்வேறு சாலைகளையும் நாம் முடக்க வேண்டும். அரசுக்கு நாம் அழுத்தம் தரவேண்டும். இதுதான் ஷர்ஜீல் இமாமின் சர்ச்சை பேச்சு.