டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட இன்றும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பிரமாண்டமான அணிவகுப்புகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்.

Anti CAA Protestors gather at Delhi. Shaheen Bagh

மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றினர். இதனிடையே மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷகீன் பாக்கில் இன்றும் போராட்டம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்றும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் நாட்டின் பல பகுதிகளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்

இதனிடையே டெல்லி ஷகீன் பாக் போராட்ட ஒருங்கிணைப்பாளரும் டெல்லி ஜே.என்.எயூ. முன்னாள் மாணவருமான ஷர்ஜீல் இமாமை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். டெல்லி போராட்டத்தில் பேசிய ஷர்ஜீல் இமாம், அஸ்ஸாமை நாட்டில் இருந்து துண்டிப்போம் என பேசியிருந்தார்.

இதனால் அவர் மீது தேசதுரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. அவரை கைது செய்ய போலீசார் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
A huge crowd of protesters, opposing CAA gather at Shaheen Bagh, Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X