டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே

Google Oneindia Tamil News

பீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக 43% பேர் இருப்பதாக சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28-ந் தேதி முதல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

பீகார் தேர்தல் களம்

பீகார் தேர்தல் களம்

பீகாரில் ஜேடியூ-பாஜக ஒரு அணியாகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் இன்னொரு அணியாகவும் களத்தில் உள்ளன. ஜேடியூ-பாஜக அணிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எல்ஜேபி வியூகம் வகுத்திருக்கிறது.

சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி

சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி

இந்த தேர்தல் தொடர்பாக சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவித்திருக்கிறது. இந்த கருத்து கணிப்பு முடிவு விவரம்:

நிதிஷ்குமார் எதிர்ப்பு அலை

நிதிஷ்குமார் எதிர்ப்பு அலை

நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை பீகாரில் வீசுகிறது. நிதிஷ்குமார் அரசுக்கு 42%-43% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகாரில் வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்க விகிதம், கல்வி, வறுமை ஆகிய 5-ம்தான் பிரதான தேர்தல் பிரச்சனைகளாக இருக்கின்றன.

நிதிஷ்குமாருக்கு ஆதரவு

நிதிஷ்குமாருக்கு ஆதரவு

அதேநேரத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக 31% பேரும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் முதல்வராக 27% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு 5% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பீகார் துணை முதல்வராக பாஜகவின் சுஷில் மோடிக்கு 4% பேரும் லாலு பிரசாத் யாதவுக்கு 3% பேரும்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
According to the Lokniti-CSDS Survey survey, anti-incumbency factor has risen from 42 to 43 per cent in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X