ஆஹா.. இப்படியும் நடக்குமா.. தங்க செயினை "திருடும் எறும்புகள்.." தட தடக்கும் வீடியோ
டெல்லி: ஏதோ சர்க்கரை, வெல்ல தீனியை எறும்புகள் தூக்கிச் செல்வது போல் ஒரு தங்க செயினையே இந்த எறும்புகள் தூக்கிச் செல்கின்றன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
எறும்புகள் சர்க்கரை, எண்ணெய் பொருட்கள், வெல்லம், தேன், ரவை உள்ளிட்ட பொருட்களில் இருக்கும். அவற்றை சாப்பிடும். மேலும் வெட்டவெளியில் இருக்கும் எறும்புகள் மழைக்காலத்தில் உணவை சேமித்து வைக்க தொடங்கும்.
இதற்காக கூட்டாக சேர்ந்து தங்களுக்கு கிடைக்கும் உணவை எங்கயாவது பதுக்கி வைக்கும். மழை காலங்களில் அந்த உணவை உட்கொள்ளும். சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சர்க்கரை டப்பாவில் உப்புனு எழுத வேண்டும் என காமெடியாக சொல்வது உண்டு.
100 பவுனில் முறுக்கு செயின்.. இந்தியாவில் மிக பெரிய தங்க செயின்! வரிச்சூர் செல்வத்தின் அடுத்த அதிரடி

எறும்புகள்
ஆனால் எறும்புகளிடம் நம்ம பருப்பு வேகாது. சுறுசுறுப்புக்கு எறும்புகளையும் தேனீக்களையும் உருவகப்படுத்துவதுண்டு. ஐஎஃப்எஸ் அதிகாரியான சுசாந்தா நந்தா பறப்பன, ஊர்வன, மிதப்பன, நடப்பன உள்ளிட்டவை பற்றி கிடைக்கும் தகவல்களை வீடியோவாக வெளியிடுவார்.

குட்டி கடத்தல்காரர்கள்
பெரும்பாலும் அவர் வெளியிடுபவை ஆச்சரியமளிப்பதாகவும் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில் அவர் வெளியிட்ட வீடியோவில் எறும்புகள் ஒரு தங்க செயினை இழுத்து செல்கின்றன. அந்த வீடியோவுக்கு "குட்டி கடத்தல்காரர்கள் என்னுடைய கேள்வி என்னவெனில் இவர்களை எந்த ஐபிசி செக்ஷனில் வழக்குப் பதிவு செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோ வைரல்
இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு இந்த கடத்தல்காரர்களை எல்லாம் சிறையில் அடைப்பது கடினம். இவர்களுக்கு என சட்டவிதிகள் ஏதேனும் இருக்கின்றனவா என நெட்டிசன்கள் கேள்வியுள்ளனர். ஒன்றாக இணைந்து செயல்படுவதன் வலிமையை இந்த எறும்புகள் நிரூபித்துவிட்டார்கள் என்கிறார் ஒரு நெட்டிசன்.
|
ஒழுக்கம்
துரதிருஷ்டவசமாக எறும்புகளின் ஒழுக்கம் மற்றும் கூட்டு முயற்சியில் மனிதர்கள் அவற்றை அடித்துக் கொள்ளவே முடியாது என்கிறார் ஒரு நெட்டிசன். இவர்களுக்கு நான் வேலை கொடுக்கிறேன், பயோடேட்டா எல்லாம் வேண்டாம். ஆண்டுக்கு 12 சாக்கு பை சர்க்கரையை ஊதியமாக தருகிறேன் என்கிறார் ஒரு வலைஞர்.