டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா.. தோற்பதை போல தெரியும், ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும்.. நிதின் கட்கரி அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Anything can happen in cricket and politics- Gadkari on Maமகாராஷ்டிரா.. தோற்பதை போல தெரியும், ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும் !harashtra govt formation

    டெல்லி: அரசியலும், கிரிக்கெட்டைப்போலத்தான், எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும், என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிதின் கட்கரி டெல்லியில், நேற்று இவ்வாறு தெரிவித்தார்.

    Anything can happen in cricket and politics: Nitin Gadkari

    மேலும் அவர் கூறுகையில், எனது இந்திய அரசியல் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், நமது ஜனநாயக அடிப்படையில் எந்த ஒரு அரசு மாறினாலும் கூட, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களும், பணிகளும் நிறுத்தப்படாமல் தொடரும்.

    மகாராஷ்டிராவில் எந்த அரசு வரப்போகிறது என்பது எனக்கு தெரியாது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக அல்லது சிவசேனா என எந்த கட்சியாக இருந்தாலும், நேர்மரை அரசியலுக்கு கண்டிப்பாக ஆதரவளிப்பார்கள்.

    தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கைதலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

    செயல்படுத்தப்படும் மிகப் பெரிய திட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர், தெரிவித்தபோது நிருபர்கள் குறுக்கிட்டு, மகாராஷ்டிரா ஆட்சி அமைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக, பதிலளித்த அவர், கிரிக்கெட்டிலும் சரி, அரசியலிலும் சரி எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் போட்டியில் நீங்கள் தோற்பதைப் போல தோன்றும். ஆனால் இறுதி முடிவு நேர் எதிராக இருக்கும். நான் தற்போது டெல்லிக்கு வந்து உள்ளேன். மகராஷ்டிராவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நடுவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வருவதால், அங்கு அரசு அமைக்க, எந்த கட்சியும் போதிய ஆதரவை தர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Union Minister Nitin Gadkari said here on Thursday that whosoever forms government in Maharashtra, the developmental projects and policies rolled by the previous regime would not be interrupted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X