டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் ரெடியான அதிநவீன அப்பாச்சி கார்டியன்.. இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்பேர்பட்ட வானிலை சூழலிலும் பறக்கும் திறன் கொண்ட, அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப்படைக்கு மேலும் வலுசேர்க்கும் என ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக கடந்த 2015ல் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடைய அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டரை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது

Apache guardian helicopter produced in the United States., Handed over to India

அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 10,433 கிலோ எடையை தாங்கும். மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. வானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள், 1200 ரவுண்டுகள் சுடக்கூடிய எம்.320 செயின் கன் மற்றும் ராக்கெட்டுகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.

மத்தியில் அடுத்து யார் ஆட்சி? தீர்மானிக்கப்போவது டெல்லியிலுள்ள 7 தொகுதிகள்தான்.. நம்ப முடிகிறதா? மத்தியில் அடுத்து யார் ஆட்சி? தீர்மானிக்கப்போவது டெல்லியிலுள்ள 7 தொகுதிகள்தான்.. நம்ப முடிகிறதா?

இருளிலும் தெளிவான காட்சிகளை வழங்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. போர்க்களத்திலிருந்து படங்களை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நவீன வசதிகள் கொண்ட அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டரை, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கும் வகையில் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மொத்தம் 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது முழுவதும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப் படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டது.

Apache guardian helicopter produced in the United States., Handed over to India

இந்த ஹெலிகாப்டரை அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து, ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் ஜூலைக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நவீன ரக ஹெலிகாப்டர்களை இயக்குவது தொடர்பாக, தேர்வு செய்யப்பட்ட விமானப் படை குழு ஒன்று அலபாமாவில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளத்தில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், முதல் ஹெலிகாப்டரை அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Apache Guardian helicopter has been handed over to Indian Air Force, which is capable of flying in some of the US weather conditions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X