டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூழ்கிய தாமரை.. குஜராத்தை மட்டும் வென்றுவிட்டு.. மற்ற 6 மாநிலங்களில் அடி வாங்கிய பாஜக! அப்போ 2024?

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இருந்தாலும் மற்ற 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது போல இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்!

குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

2017ல் இங்கு 99 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, இந்த முறை 156 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மோடி அலையில் காங்கிரஸ் காலி.. ரொம்ப மோசமாக தோற்ற ‛கை’.. குஜராத் பாஜக வெற்றியால் குஷ்பு ‛குஷி‛ மோடி அலையில் காங்கிரஸ் காலி.. ரொம்ப மோசமாக தோற்ற ‛கை’.. குஜராத் பாஜக வெற்றியால் குஷ்பு ‛குஷி‛

பாஜக வெற்றி

பாஜக வெற்றி

குஜராத் பாஜகவின் கோட்டை. இங்கு 27 வருடங்களாக பாஜக தோல்வி அடைந்ததே இல்லை. இந்த முறையும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, பாஜக சாதனை செய்துள்ளது. பாஜக தொண்டர்கள் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. பிரதமர் மோடி மாறி மாறி கூட்டங்கள் நடத்தியதற்கும், பிரச்சாரங்கள் செய்ததற்கும் பலன் கிடைத்துள்ளது. குஜராத் வெற்றியை என்னதான் பாஜக தலைவர்கள் கொண்டாடி வந்தாலும், மற்ற இடங்களில் நடைபெற்ற தேர்தல் பாஜகவிற்கு பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது.

 இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 40 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 25 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

ஆட்சி இழக்கிறது

ஆட்சி இழக்கிறது

இதன் மூலம் இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது. வீரபத்ர சிங் போன்ற வலிமையான காங்கிரஸ் தலைவர்களின் மறைவிற்கு பின்பும் கூட காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று அசத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சியை இழக்கவில்லை டெல்லியில் 15 வருடங்களாக பாஜக வசம் இருந்த மாநகராட்சியும் கைநழுவி போய் உள்ளது. அங்கு 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வென்று, மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. கடந்த 2017ல் இங்கு 48 வார்டுகளில் மட்டுமே ஆம் ஆத்மி வென்றது.

2017 ரிசல்ட்

2017 ரிசல்ட்

2017 டெல்லி மாநகராட்சியில் 181 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 104 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. காங்கிரஸ் கடந்த முறை 31 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 9 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. இந்த தேர்தல் மூலம் 15 வருடமாக டெல்லி மாநகராட்சியில் கொடி நாட்டிய பாஜக வீழ்ந்து உள்ளது. அதேபோல் 5 மாநில இடைத்தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. பீகாரில் மட்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வென்றுள்ளது.

இடைத்தேர்தல்கள்

இடைத்தேர்தல்கள்

உத்தர பிரதேசம் கட்டௌலி சட்டசபை இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக்தளம் வேட்பாளர் மதன் பையா வென்றுள்ளார். சட்டீஸ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மனோஜ் வென்றுள்ளார். ஒடிசாவில் பதம்பூர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பர்சா சிங் வென்றுள்ளார். ராஜஸ்தான் சர்தர்ஷாஹர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அணில் குமார் வென்றுள்ளார். பீகாரில் மட்டும் குர்ஹானி தொகுதியில் பாஜகவின் கேசவ பிரசாத் வென்றுள்ளார். 5 மாநில இடைத்தேர்தல்களில் 4ல் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

தோல்வி

தோல்வி

குஜராத்தில் வெற்றிபெற்றதை பாஜக பெரிதாக கொண்டாடி வருகிறது. ஆனால் 4 மாநில லோக்சபா தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. பாஜகவின் கோட்டையான குஜராத் தவிர மற்ற இடங்களில் பாஜக மண்ணை கவ்வி உள்ளது. பாஜகவின் இந்த தோல்வி அவர்களின் மிகப்பெரிய சரிவையே காட்டுகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில்.. இந்த தேர்தல் முடிவுகளை பார்த்து பாஜக கொண்டாடுவதை விட வருத்தம் அடையவே வேண்டும்.

English summary
Apart from Gujarat victory, BJP lost Himachal Pradesh, Delhi and 4 State by-elections this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X