காவிரி ஆணையத்திற்கு முழு நேர தலைவர் தேவை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு
டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவர் மசூத் உசேனை நீக்கி விட்டு, முழு நேர தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.

அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தற்காலிக தலைவரான மசூத் உசேனை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மசூத் உசேன் தற்போது மத்திய நீர் ஆணையத்தின் தலைவராகவும் இருக்கிறார். இதனால்தான் புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications