டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையெழுத்து எங்க போடறதுனுகூட தெரியல..12ஆவது படிச்சவங்களையெல்லாம் தேர்வு செய்யாதீர்- கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி: 12-ஆம் வகுப்பு படித்தவரையெல்லாம் பிரதமராக்கிவிடாதீர் என எதிர்க்கட்சியினர் பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி மோசடி செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அது தங்கள் நிறுவனத்துக்குத்தான் கிடைக்க போகிறது என்பது அனில் அம்பானிக்கு முன்கூட்டியே தெரியும் என ராகுல் காந்தி நேற்று முன் தினம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் எதிர்க்கட்சியினரின் பேரணி நடத்தினர். இதில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசுகையில் கடந்த மக்களவை தேர்தலில் 12-ஆம் வகுப்பு படித்தவரை பிரதமராக தேர்வு செய்தீர்கள்.

கையெழுத்து

கையெழுத்து

இந்த முறையும் இதே தவறை செய்யாதீர்கள். நன்கு படித்தவரை பிரதமராக தேர்வு செய்யுங்கள். 12-ஆவது வகுப்பு படித்தவரால் கையெழுத்தை எங்கு போடுவது என்பது கூட தெரியவில்லை.

ராஜினாமா

ராஜினாமா

விமான விலையேற்றத்துக்கு பிரதமர் மோடிதான் காரணம். ரபேல் நிறுவனத்துடன் பிரதமரே நேரடியாக பேரம் பேசியுள்ளார். ரபேல் ஒப்பந்தத்துக்கு பின்னால் உள்ள உண்மை தொடர்ந்து மறைக்கப்பட்டால், பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமர் அல்ல

பிரதமர் அல்ல

நாட்டின் தலைநகரம் டெல்லி என்பதை பிரதமருக்கு கூறி கொள்ள விரும்புகிறேன். அதுபோல் அவரும் பாகிஸ்தானின் பிரதமர் அல்ல என்பதையும் கூறி கொள்கிறேன்.

முதல்வர் பங்கேற்பு

முதல்வர் பங்கேற்பு

ஊழல் தடுப்பு கட்டடத்தை பாகிஸ்தான் பிரதமர் ஆக்கிரமித்திருந்தால் எங்கள் ரத்தம் எத்தனை சூடானது என்பதை உங்களுக்கு காட்டியிருப்போம். ஆனால் இந்திய பிரதமர் என்பதால் உங்களை மதிக்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பேரணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

English summary
Delhi Chief Minister Arvind Kejriwal said that voters made a Class 12-pass the prime minister of the country but they should not repeat the mistake in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X