டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்!

லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், மீண்டும் ஆட்சி அமைப்பதை கருத்தில் கொண்டும் பாஜகவில் மோடிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் Plan B இதுதான்!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டும், மீண்டும் ஆட்சி அமைப்பதை கருத்தில் கொண்டும் பாஜகவில் மோடிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வருகிறது.

    லோக்சபா தேர்தல் தற்போது நடந்து வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 நடக்க உள்ளது.

    இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலுக்காக பாஜக கட்சி இரண்டு விதமான திட்டங்களை போட்டு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    "பலான" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்!

    அத்வானி அறிக்கை

    அத்வானி அறிக்கை

    கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது வலைப்பக்கத்தில் முக்கிய போஸ்ட் ஒன்றை செய்து இருந்தார். அதில் நாம் முதலில் நாட்டை காக்க வேண்டும், பின் கட்சியை பற்றி நினைக்க வேண்டும். அதன்பின்தான் சுயத்தை பற்றி நினைக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் எல்லோரும் தேச விரோதிகள் கிடையாது. அவர்கள் நமக்கு அறிவுரை சொல்பவர்கள் அவ்வளவுதான், என்று குறிப்பிட்டார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    அத்வானியின் இந்த போஸ்டுக்கு பின் வெறும் மோடி மீதான மோதல் மட்டுமே காரணம் இல்லை என்று கூறுகிறார்கள். பல பாஜக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவிற்கு பின்பே அத்வானி இப்படி போஸ்ட் செய்தார் என்று கூறுகிறார்கள். பாஜகவில் பிரதமர் மோடி மட்டுமே முன்னிறுத்தப்படுவதை பாஜகவின் முக்கிய தலைகள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள் .

    நிதின் கட்கரி

    நிதின் கட்கரி

    இதனால்தான் பாஜகவில் சில நாட்களுக்கு முன் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவரை அமைதியாக இருந்த நிதின் கட்கரியை பாஜக தலைவர்கள் தொடங்கி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதற்கு காரணம் மோடிக்கு பதிலாக நிதினை முன்னிறுத்த பாஜக முயல்கிறது என்பதால்தான் என்கிறார்கள்.

    என்ன பிளான்

    என்ன பிளான்

    பாஜக இப்போது இரண்டு முக்கிய திட்டங்களை வைத்து இருப்பதாக, கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி, மோடியை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திப்பது. அதில் எப்படியாவது வெற்றி பெறுவது. இல்லையென்றால் மோடியை மொத்தமாக ஓரம் கட்டுவது என்று பாஜக திட்டமிட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    அமித் ஷா இல்லை

    அமித் ஷா இல்லை

    எப்படி இருந்தாலும், அமித் ஷா இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் அவர் எம்பி ஆன பின், கட்சி பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்படும் . வேறு ஒரு நபர்தான் தலைவராக நியமிக்கப்படுவார். இதை எல்லாம் வைத்து மோடிக்கு எதிரான நிலைபாடு பாஜகவில் உருவாகலாம் என்று கூறுகிறார்கள்.

    எதனால்

    எதனால்

    தற்போது பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான விமர்சனம், பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது. அதனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் மோடியின் பக்கம் திருப்பிவிட்டு மொத்தமாக பாஜக கட்சியை கறை இல்லாமல் காட்ட திட்டம் போடப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.

    ஏன் இந்த திட்டம்

    ஏன் இந்த திட்டம்

    இதன் மூலம் தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியை விரிவுபடுத்த முடியும். பெரும்பான்மை பெறாத பட்சத்தில் புதிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியும். ஆனால் அவர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு பதில் வேறு ஒருவரை முன்னிறுத்தவே பாஜக இப்படி செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.

    பாவம்

    பாவம்

    பாஜகவில் அத்வானிக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது மோடிக்கும் ஏற்பட போகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தால் மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் போல அவர் கெத்தாக வலம் வருவார் என்கிறார்கள். ஆனால் அப்படி, இல்லையென்றால் மோடி பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    2019 Lok Sabha election: Are BJP and NDA setting things against Modi for a better result?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X