டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டால்தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை சாடியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் நீதிபதி முரளிதர் பிறப்பித்த ஒரு உத்தரவை குருமூர்த்தி விமர்சித்திருந்தார். மேலும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரத்திடம் நீதிபதி முரளிதர், வழக்கறிஞராக வேலை பார்த்தவர் என்றும் குருமூர்த்தி கூறியிருந்தார்.

Are you ready to apologize? asks Delhi HC to Gurumurthy

இதனையடுத்து குருமூர்த்தி மீது டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி குருமூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குருமூர்த்தி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்; அப்படி மன்னிப்பு கேட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கலாம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

English summary
The Delhi High Court Court stated that if Gurumurthy and others ready to apologize, it would close the contempt proceedings pending.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X