டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் சீனியர் வக்கீல்களின் அனல்பறந்த வாதங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ

    டெல்லி: கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி மற்றும் ராஜீவ் தான் ஆகியோர் அனல்பறக்கும் ஆனித்தரமான வாதங்களை முன்வைத்தனர்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 பெஞ்ச் நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தனர். எம்.எல்.ஏக்கள் சார்பாக முகுல் ரோத்தகி, சபாநாயகர் சார்பாக அபிஷேக்மனு சிங்வி, முதல்வர் குமாரசாமி தரப்பில் ராஜீவ் தவான் ஆகியோர் வாதிட்டனர்.

    Arguments on Karnataka MLAs resignation case in SC

    இவ்வழக்கில் நாளை காலை 10.3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்றைய விசாரணையில் முகுல் ரோத்தகி முன்வைத்த முக்கிய கருத்து:

    • நான் எம்.எல்.ஏ.வாக இருக்க விரும்பவில்லை என்பது என் உரிமை. அந்த உரிமையை சபாநாயகர் பறிக்க முடியாது.
    • ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும்.
    • ராஜினாமா செய்ததாக உச்சநீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் எம்,எல்.ஏக்கள் அறிவித்த பின்னரும் சபாநாயகர் முடிவு எடுக்காதது வேதனைக்குரியது.

    சபாநாயகர் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதம்;

    • ராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏக்களிடம் அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் சபாநாயகர் ஜூலை 11-ல் விசாரணை நடத்தினார்.
    • ராஜினாமா கடிதம் கொடுத்த 15 எம்.எல்.ஏக்களில் 11 பேர் சபாநாயகரை சந்தித்தனர். 4 பேர் இன்னமும் சபாநாயகரை சந்திக்கவில்லை.
    • தம்மை சந்திக்க வருவதாக எந்த எம்.எல்.ஏ.வும் தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
    • எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சந்திக்க மறுத்ததாக கூறப்படுவது தவறான தகவல்.
    • எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அதில் இருந்து தப்பிக்க ஒருவழியாக ராஜினாமாவை பயன்படுத்த முடியாது.
    • சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அது தகுதி நீக்கத்துக்குரியது- ஏனெனில் கட்சிக்கு எதிரான நடவடிக்கை.
    • சபாநாயகரின் முடிவு எடுக்கும் அதிகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது; கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமானது கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது என்பது ஆட்சி அமைப்பதற்கானது மட்டுமே.

    முதல்வர் குமாரசாமி தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் முன்வைத்த வாதம்:

    • சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட முடியாது; உச்சநீதிமன்றத்தின் வரம்புகுட்பட்ட வழக்கே அல்ல இது.
    • எம்.எல்.ஏக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.
    • ராஜினாமாவை அனுப்பிவிட்டு மும்பைக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் ஏன் சபாநாயகரை சந்திக்கவில்லை
    • எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்றால் இவர்கள் நாளை கட்சி தாவி அமைச்சர்களாவார்கள். இந்த அரசியல் களைகளை அனுமதிக்க கூடாது.

    English summary
    Karnataka CM Kumaraswamy' counsel Senior advocate Rajeev Dhavn told the Supreme Court that it had no jurisdiction in MLA's resignation case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X