டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி!

அருணாச்சலப்பிரதேசத்தில் முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Armed Forces withdrawn | அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்- வீடியோ

    டெல்லி: அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சில முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

    ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ல் இயற்றப்பட்ட மிக சர்ச்சைக்குரிய சட்டமாகும். இந்த சட்டம் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்க கூடிய சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திரத்திற்கு முன் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சுதந்திரத்திற்கு பின் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

    இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம் இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்

    ஏன்

    ஏன்

    இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆயுதப்படை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த சட்டம் முதலில் கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. பின் எதிர்ப்பு காரணமாக சில மாநிலங்களில் சில இடங்களில் மட்டும் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த நிலையில்தான் இந்த சட்டத்தை மொத்தமாக நீக்க போவதாக நேற்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பாஜக தொடர்ந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென்று அருணாச்சலப்பிரதேசத்தில் முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

    3 மாவட்டங்கள்

    3 மாவட்டங்கள்

    மொத்தம் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் இருந்து இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் வாக்குறுதிக்கு வடகிழக்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பு இருந்த காரணத்தால் பாஜக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Armed Forces (Special Powers) Act withdrawn partially from Arunachal Pradesh after Congress's Manifesto.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X