டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு முப்படைகள் மரியாதை.. சற்று நேரத்தில் ராயல் சல்யூட்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் முப்படைகள் சார்பாக இன்று போர்விமானங்கள் பறக்கவிடப்படுவதுடன் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் இந்த நிகழ்வு தொடங்க உள்ளது.

இது தொடர்பாக ராணுவம், கடற்படை, விமானப்படை சார்பில் இன்று மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சிகளின் விவரம் பின்வருமாறு;

Armed forces planned for tomorrow to salute corona warriors
  • இன்று காலை டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகு கொரோனா வீரர்களுக்கு நன்றி செலுத்துதல் நிகழ்ச்சி முப்படைகள் சார்பாக தொடங்குகிறது. 10 மணிக்கு நடக்க வேண்டிய இந்த நிகழ்வு மழை காரணமாக 11 மணி வரை தள்ளி போகிறது.
  • 11 மணிக்கு போர் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படுகின்றன. அதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்படும்.

ஊரடங்கு 3.0 என்ன நோக்கத்திற்காக நீட்டிக்கப்பட்டது... விளக்கம் தர வேண்டியது அரசின் கடமை -ப.சிதம்பரம்ஊரடங்கு 3.0 என்ன நோக்கத்திற்காக நீட்டிக்கப்பட்டது... விளக்கம் தர வேண்டியது அரசின் கடமை -ப.சிதம்பரம்

  • நாடு முழுக்க 10-11 மணிக்குள் இந்தியா விமானப்படை சார்பில் போர்விமானங்கள் பறக்கவிடப்படுகின்றன. பல்வேறு முக்கிய நகரங்களை உள்ளடக்கிய வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • போர் விமானங்கள் காஷ்மீர் முதல் திருவனந்தபுரம் வரை (வடக்கு முதல் தெற்கு) மற்றும் திப்ருகர் முதல் கட்ச் வரை(கிழக்கு முதல் மேற்கு) அனைத்துப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பறக்கவிடப்படுகின்றன.
  • கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகள் மீது இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் வட்டமடிக்க உள்ளன.
  • டெல்லியை பொறுத்தவரை சப்தர்ஜங் மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை, தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனை, பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனை, மற்றும் ராணுவ மருத்துவமனை மீது இந்த ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து மருத்துவர்களுக்கு சல்யூட் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், இந்தியா முழுவதும் 5 இடங்களில் கொரோனா சிகிச்சைபிரிவு உள்ள மருத்துவமனைகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Armed forces planned for tomorrow to salute corona warriors
  • சுகோய் 30, ஜாகுவார் மற்றும் மிக் 29 ரக போர் விமானங்கள் டெல்லியில் உள்ள ராஜபாதை மீது பறக்கவிடப்படுவதுடன் டெல்லி நகரம் முழுவதும் வட்டமடிக்கும்.
  • இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் அவைகள் அனைத்தும் 500 மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்படுவது.
Armed forces planned for tomorrow to salute corona warriors
  • நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை தரப்படும் மாநகராட்சி மருத்துவமனைகள் முன்பாக ராணுவத்தினர் தேசபக்தியை பறைசாற்றும் வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்கி மருத்துவப் பணியாளர்களுக்கு இசையால் நன்றி செலுத்த உள்ளனர்.
  • நாடு முழுவதும் 25 இடங்களில் 7,516 கி.மீ. கடற்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் கப்பற்படைக்கு சொந்தமான 46 போர்க்கப்பல்கள் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ஒலி( சைரன்)எழுப்பும்.
  • மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் கடற்படைக்கு சொந்தமான 5 கப்பல்கள் நிறுத்தப்பட்டு இன்று இரவு 7.30 மணி முதல் 11.59 வரை வண்ண விளக்குகள் மிளிர விடப்படும்.

இதே போல் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களை நிறுத்தி இன்று இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு வரை வண்ண விளக்குகளால் மிளிரவிடப்படவுள்ளன.

English summary
Armed forces planned for tomorrow to salute corona warriors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X