டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவர்தான் சரியான நபர்.. மத்திய அரசு குறி வைக்கும் ஆள்.. முப்படையையும் நிர்வகிக்க போகும் ஜாம்பவான்!

இந்திய ராணுவத்தில் முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரியை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தில் முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரியை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கு தனி தனி தலைவர்கள் இருக்கிறார்கள். இனி அது போல இருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும்.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முப்படைக்கும் தலைவராக ஒரே நபர் இருப்பார் என்கிறார்கள்.

தனியாக விசாரிப்போம்.. காஷ்மீர் பிரச்சனையில் 5 முக்கிய நாடுகளுடன் கை கோர்க்கும் சீனா.. ஷாக்கிங்! தனியாக விசாரிப்போம்.. காஷ்மீர் பிரச்சனையில் 5 முக்கிய நாடுகளுடன் கை கோர்க்கும் சீனா.. ஷாக்கிங்!

நீண்ட நாள்கள்

நீண்ட நாள்கள்

இந்த பொறுப்பை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மத்திய அரசுக்கு பாதுகாப்பு துறை ஆலோசகர்கள் பலர் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியில் இப்போது இந்த பதவி உறுதியாகி உள்ளது.

யார் அவர்

யார் அவர்

அதன்படி இந்த பதவிக்கு பெரும்பாலும் ராணுவ மேஜர் பிபின் ராவத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராணுவ மேஜர் பிபின் ராவத் தற்போது தரைப்படைத் தளபதியாக இருக்கிறார். கூர்க்கா படை பிரிவில் சேர்ந்த இவர் 1978ல் இருந்து ராணுவத்தில் இருக்கிறார்.

பிபின் ராவத்

பிபின் ராவத்

பல்வேறு ராணுவ ஆபரேஷன்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அதேபோல் விமானப்படை மற்றும் கப்பற்படை இரண்டிலும் கூட இவர் நல்ல தொடர்பில் உள்ளார். அதனால் இவர்தான் இந்த பணிக்கு பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக நெருக்கம்

பாஜக நெருக்கம்

இதெல்லாம் போக பிபின் ராவத் தற்போது இருக்கும் மத்திய பாஜக அரசுக்கும் நெருக்கமானவர். 2016ல் இவர் பாஜக ஆட்சியில்தான் ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே வருடம் இறுதியில் தரைப்படை தளபதியானார். ஆகவே இவரை முப்படை தளபதியாக நியமிக்க வாய்ப்புள்ளது.

English summary
The present Army chief Bipin Rawat may be elected as the first chief of defense staff.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X