டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாசலப்பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் இல்லை: ராணுவம் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாசலப் பிரதேச மாநில எல்லையில் சீனா ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் சீனா ராணுவம் ஊடுருவியிருப்பதாக பாஜக எம்.பி தபிர் காவோ புகார் தெரிவித்திருந்தார். மேலும் அருணாசல பிரதேசத்தின் சக்லகாம் பகுதியில் பாலம் ஒன்றையும் இந்திய எல்லைக்குள் சீனா ராணுவம் கட்டி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

Army denies China incursions in Arunachal

அதேபோல அருணாசல பிரதேச எல்லையில் 100 கி.மீ தொலைவுக்கு சீனா ஊடுருவியுள்ளதாகவும் சில டிவி சேனல்கள் ஒளிபரப்பின. ஆனால் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடவுள் இல்லை.. பெரியார் சிலைக்கு கீழ் உள்ள வாசகத்தை நீக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!கடவுள் இல்லை.. பெரியார் சிலைக்கு கீழ் உள்ள வாசகத்தை நீக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர், அருணாசல பிரதேச எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை. சின டிவி சேனல்கள் ஒளிபரப்பிய பகுதிகளில் பொதுமக்கள் சிலர் வேட்டைக்காகவும் மூலிகைகளை தேடியும் சென்றிருக்கின்றனர்.

அதைத் தவிர அங்கு சீனா ராணுவ வீரர்களோ நிரந்தர முகாம்களோ அமைக்கப்படவும் இல்லை. அருணாசல பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் என்கிற செய்திகள் பொய்யானவை என கூறியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் பூடானில் டோக்லாம் பகுதிக்குள் சீனா அத்துமீறி ஊடுருவியது. இதையடுத்து இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. சில மாதங்கள் நீடித்த இப்பதற்றம் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சீனா வெளியேறியதால் தணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Army Spokesperson has denied on reports of alleging incursions by Chinese troops in Arunachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X