டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    ONE India, many languages! A section of Indian army singing Kannada song

    டெல்லி: நாடு முழுமையும் இணைப்பதற்கு இந்தி மொழிதான் அவசியம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    சுதந்திர போராட்ட காலத்தில் கூட. இந்தியை முன்னிறுத்தி நாம் சுதந்திரத்தை பெறவில்லை. எந்த மொழியோ, எந்த இனமோ, நாடு என்று வந்துவிட்டால் இந்தியர்கள் ஒற்றுமையாக நின்று கை கோர்த்துதான் பழக்கமே தவிர, ஹிந்தியை பெருமை பேசுவதற்காக இப்படி அமித்ஷா பேசயிருக்க கூடாது என்று நாடு முழுக்க, அதிலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அலைகள் எழுந்து கொண்டுள்ளன.

    கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமித்ஷாவை கண்டித்து கன்னட அமைப்பினர் கடந்த சனிக்கிழமை பெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    ஏன் கட்டாயப்படுத்தறீங்க.. மொழி ஒரு தேர்வுதான்.. குஷ்பு பதிவிட்ட தில் ட்வீட்!ஏன் கட்டாயப்படுத்தறீங்க.. மொழி ஒரு தேர்வுதான்.. குஷ்பு பதிவிட்ட தில் ட்வீட்!

    தலைவர்கள்

    தலைவர்கள்

    தமிழகத்திலும் திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

    ராணுவம்

    இந்த நிலையில் எல்லையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சிப்பாய்கள் ஒரு குழுவாக கன்னட பாடல் ஒன்றை பாடியபடி ஆயுதங்களை தூக்கி கொண்டு நடந்து செல்லும் காட்சி வைரல் ஆகியுள்ளது.

    வட கர்நாடக உச்சரிப்பு

    வட கர்நாடக உச்சரிப்பு

    வட கர்நாடகாவில், பேசப்படும் கன்னட உச்சரிப்புடன் அந்த சிப்பாய்கள் பாடிக்கொண்டே நடக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணுவம் தான். அப்படியான ராணுவத்தில் பல மொழி பேசக்கூடிய சிப்பாய்களும் பணியாற்றுகிறார்கள்.

    வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்

    வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்

    அவர்கள் தங்களுக்குள் தங்களது தாய் மொழியை பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாடு என்று வரும்போது அவர்கள் ஓரணியில் நின்று தங்கள் உயிரையும் துச்சமென மதித்து கடமையாற்றிவருகிறார்கள். இந்த உண்மையை, ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும் என்பதுதான் இந்த ட்விட்டின் நோக்கம். ஒரே இந்தியா பல மொழிகள் இதுதான் இந்த நாட்டின் பலம் என்பது தானே உண்மை.

    English summary
    Army men using their mother tongue while doing their duty, here is the reply for Amit Shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X